முகப்பு /வணிகம் /

தென்னை, பாக்கு சாகுபடி செய்வது எப்படி? நாமக்கல்லில் இலவச பயிற்சி!

தென்னை, பாக்கு சாகுபடி செய்வது எப்படி? நாமக்கல்லில் இலவச பயிற்சி!

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal agriculture | நாமக்கல்லில் வரும் 25ம் தேதி தென்னை மற்றும் பாக்கு சாகுபடி குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.

  • Last Updated :
  • Namakkal, India

தென்னை சாகுபடியில் தற்போது விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். ஏனென்றால் தென்னை ஆயுள் முழுவதும் வருமானம் தரக்கூடிய ஒரு நீண்ட கால பயிர் ஆகும். இதே போல் பாக்கு மர சாகுபடியும் நீண்ட கால நிரந்தர வருவாய் தரக்கூடியதாகும்.

தென்னை மற்றும் பாக்கு மரங்களில் அவ்வப்போது ஏற்படும் நோய் தாக்குதல்கள் மற்றும் பராமரிப்பு பற்றி விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.

இந்நிலையில் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 25ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தென்னை மற்றும் பாக்கு சாகுபடி குறிப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் மண்பரிசோதனையின் முக்கியத்துவம், நாற்றாங்கால் பராமரிப்பு, ஊட்டச்சத்து, நீர் மற்றும் களை மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து தெளிவாக விளக்கவுரை அளிக்கப்படும். இந்த பயிற்சியில் விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம்.

ALSO READ | நாமக்கல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாளை (ஏப் 24) கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்..

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு, 24ம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Agriculture, Local News, Namakkal