திருநெல்வேலியில் வேளாண் துறையில் முன்னாள் துணை இயக்குனர் டேவிட் ராஜா பியூலா குறைவான தண்ணீரில் பயிர்களை எவ்வாறு வளர செய்வது தொடர்பாக விளக்கினார். விவசாயிகளின் நலனுக்காக கடந்த 35 ஆண்டுகளாக பணி செய்து வருகிறார் டேவிட் ராஜா பியூலா. இவர் வேளாண் துறையில் முன்னாள் துணை இயக்குனராக பணியாற்றியவர். தனது பணி ஓய்விற்கு பிறகும் விவசாயிகள் கடன் வாங்காமல் பயிர் செய்வது உள்ளிட்டவை தொடர்பாக அறிவுரை கூறி வருகிறார். மேலும், விவசாய நிலத்தில் உள்ள பூச்சிகளை அழிக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றையும் இவர் தயார் செய்துள்ளார்.
இந்நிலையில், பட்ஜெட் முறையில் தண்ணீரை எவ்வாறு பயிர்களுக்கு ஊற்றுவது தொடர்பாக நம்மிடம் அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் வற்றி போயிருந்தால் போர் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே கிணற்றை நிரப்ப முடியும். அப்படி நிரப்பினால் கூட கிணற்றில் குறைவாக தான் தண்ணீர் இருக்கும்.
ஆனால், குறைவான தண்ணீரைக் கொண்டு சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு வகையான பயிர்களுக்கு தேவையான நீரை பட்ஜெட் முறையில் ஊற்றி வருகிறார். டேவிட் தனது பணி ஓய்விற்கு பிறகு திருநெல்வேலி அருகே நிலங்களை வாங்கி பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு வருகிறார். கிணற்றில் தண்ணீர் குறைவாக இருப்பினும் அதனை எவ்வாறு கணக்கிட்டு செலவிட வேண்டும் தெரியுமா? இதுவும் நமது குடும்பத்தில் வருமான பட்ஜெட் போன்றதே ஆகும்.
கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட மரங்களுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். எத்தனை நாள்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும், என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதேபோல் தான் மற்ற பயிர்களுக்கும் அளவிட்டு தண்ணீர் பாய்ச்சினால், மழை இல்லை என்றாலும் கூட ஏழு ஏக்கரில் சுமார் நான்கு ஏக்கர் வரை பயிர் செய்ய முடியும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தெளிப்பு நீர் பாசனம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற பயிர்களுக்கு தண்ணீர் பாயும்போது குறிப்பிட்ட பயிர்களுக்கு அதாவது ஒரு ஏக்கர் உள்ள பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனம் மூலம் தண்ணீர் ஊற்ற வழி வகை செய்யலாம் என்று விளக்கம் அளிக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Tirunelveli