முகப்பு /business /

பூந்தொட்டிகளில் விவசாயம்.. விருதுநகரில் அசத்தி வரும் மாடித்தோட்ட விவசாயி..

பூந்தொட்டிகளில் விவசாயம்.. விருதுநகரில் அசத்தி வரும் மாடித்தோட்ட விவசாயி..

X
மாடித்தோட்ட

மாடித்தோட்ட விவசாயி

Maadi Thottam | விருதுநகரில் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார் மாடித்தோட்ட விவசாயி.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

உணவே மருந்து என்றிருந்த நிலை மாறி, மருந்தே உணவு என்ற காலம் வந்துவிட்ட நிலையில், நஞ்சில்லா உணவுப்பொருட்களை பெறுவதற்காக வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார் விருதுநகரை சேர்ந்த மாடித்தோட்ட விவசாயி ஒருவர்.

விருதுநகர் லெட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் பொறியியல் பட்டதாரியான இவர் ஆரம்ப காலம் முதலே தொட்டிகளில் செடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்டு, பின்னர் படிப்படியாக வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளார். அதன் சுவை பிடித்து போகவே மாடித்தோட்டம் பற்றி தெரிந்து கொண்டு, வீட்டின் மாடியில் சிறிய அளவில் தோட்டம் அமைத்து அதில் காய்கறிகளை விளைவித்து, வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வீட்டிலேயே நஞ்சில்லா முறையில் பயிர் செய்யும் மாடிதோட்ட விவசாயியாக திகழ்கிறார்.

இதுபற்றி பேசிய பூமிநாதன், “4 ஆண்டுகளாக மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறேன். அன்று முதல் இன்று வரை வீட்டுக்கு தேவையான காய்கறிகளை தோட்டத்தில் இருந்தே பெற்று வருகிறேன். தக்காளி, மிளகாய் போன்ற காய்கறிகளை விளைவிக்கிறேன். வாழை, சீதா, மாதுளை போன்ற மரங்களையும் பெரிய தொட்டிகளில் வளர்த்து மகசூல் பெற்று வருகிறேன். மாடித்தோட்டம் அமைக்க பெரிய இடம் தேவை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வாடகை வீடு போன்ற காரணங்களுக்காக சிலர் ஆர்வம் இருந்தும் மாடித்தோட்டம் அமைக்காமல் இருப்பர். ஆனால் உண்மையில் மாடித்தோட்டம் அமைக்க பெரிய இடம் தேவையில்லை. வாடகை வீட்டில் இருப்போர் கூட சிறிய இடத்தில் 5 முதல் 10 தொட்டிகளில் அமைத்து வளர்க்கலாம். என்னை போன்று மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக தற்போது மற்றவர்களுக்கும் மாடித்தோட்டம் அமைத்து தருகிறேன்” என கூறினார்.

மேலும் மாடித்தோட்டம் பற்றிய சந்தேகங்களுக்கு 91 99420 80100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

First published:

Tags: Agriculture, Local News, Virudhunagar