திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களில் விளைவிக்கப்படும் வெள்ளரி பழங்கள் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. கொக்கலாடி, பண்ணைத்தெரு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கோடை காலங்களில் மட்டும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் வெள்ளரிப் பழம் சாகுபடி செய்து வருகின்றனர்.
வெள்ளரிப்பிஞ்சினை நாம் அனைவரும் தள்ளு வண்டிகளிலும், சைக்கிளிலும் தலைசுமையாகவும் தூக்கி வந்து விற்பனை செய்வதை பார்த்திருப்போம். ஆனால் வெள்ளரி சாகுபடி என்பது 45 முதல் 50 நாட்களுக்கு மேல் வெள்ளரி பிஞ்சு பழம் ஆகும் வரை பாதுகாத்து 3 முதல் 5 கிலோ எடை வரை நன்று வளர்ந்த பழுத்த பின்பு வியாபாரம் செய்யப்படுகிறது.
பழ வெள்ளரி சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரையில் செலவிட வேண்டும். சாகுபடி காலத்தில் 500 பழங்களுக்கு குறையாமல் அறுவடை செய்ய முடியும். வெள்ளரிப்பழமும் சுவையும், சத்தும் நிறைந்தது. கோடைக்கு ஏற்ற பழம் என்பதோடு குழந்தைகள் முதல் பெரியவர்களையும் ஈர்க்கும் இப்பழத்தை நாட்டுச்சர்க்கரை, வெல்லம் கலந்து உண்ணலாம். திருவாரூர் மாவட்ட பகுதிகளில் கோடை காலங்களில் பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக வெள்ளரி சாகுபடி ஆனது கடும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளரி சாகுபடி முறை குறித்து விவசாயி முருகையன் கூறுகையில், “நெல் அறுவடை காலம் முடிந்த பிறகு வயலை சமன்படுத்தி வெள்ளரி விதை பதிப்பதற்காக குழிகள் வெட்டி அதில் அதில் தொழு உரங்கள் விட்டு விதை நடப்படும் பின்னர் தேவையான அளவிற்கு செடி ஊட்டச்சத்து பெறுவதற்காக சத்து டானிக் மருந்துகள் செடிகளில் அடிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.
பிஞ்சிலேயே வெள்ளரியை பறிப்பது இல்லை. 40 முதல் 50 நாட்களுக்கு மேலாக வெள்ளரி பிஞ்சுகள் நன்கு பழுத்து பழமாகி வெடித்து வரும் நிலையில் உள்ள வெள்ளரி பழங்களை மட்டுமே பறித்து விற்பனை செய்வது வழக்கம். ஆண்டிற்கு செலவின தொகையான 20,000 ரூபாய் போக கோடைகாலங்களில் 3 மாத காலங்கள் மட்டுமே வெள்ளரி சாகுபடி செய்யப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த 3 மாத காலத்தில் 30,000 முதல் 40,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது பெய்த மழையின் காரணமாக பெருமளவிலான வெள்ளரி பழங்கள் வயல்களில் தண்ணீர் நின்றதால் அழுகி சேதம் அடைந்துவிட்டது. அரசு வேளாண்மை அதிகாரிகள் பார்வையிட்டு சேதங்களை மதிப்பிட்டுள்ளனர். அரசு உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் மானிய விலையில் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Money18, Tiruvarur