முகப்பு /வணிகம் /

"படிப்பும் முக்கியம் அதைவிட விவசாயம் ரொம்ப முக்கியம்" அசத்தும் புதுக்கோட்டை மாணவி!

"படிப்பும் முக்கியம் அதைவிட விவசாயம் ரொம்ப முக்கியம்" அசத்தும் புதுக்கோட்டை மாணவி!

X
ஒருபுறம்

ஒருபுறம் முதுகலை பட்டப்படிப்பு மறுபுறம் விவசாயம்  அசத்தி வரும் மாணவி..

Pudukkottai News| புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி விவசாயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு  அசத்தி வருகிறார்.

  • Last Updated :
  • Pudukkottai, India

புதுக்கோட்டை மாவட்டம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ இவர் புதுக்கோட்டை அரசு கல்லூரியில் முதுகலைப் படித்து வருகிறார். இந்த மாணவி, படித்துக்கொண்டே, விவசாயத்திலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு  அசத்தி வருகிறார். 

இவர் தங்களது 2 ஏக்கர் நிலத்தில் காய்கறி, பயறு வகை தொடங்கி, பலா ,தென்னை போன்ற வருடம் தோறும் லாபம் தரும் மரங்கள் வரையில் வைத்து விவசாய பணிகளை செய்து வருகிறார். ஜெயஸ்ரீ தம்முடைய பணிகளுக்கு இடையே நம்மிடம் பேச தொடங்கினார். எனக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே விவசாயத்தில் பெரும் ஆர்வம். சிறுவயதில் இருந்தே விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது கல்லூரி படித்து வரும் நிலையில், கல்லூரி படிப்பை முடித்து விட்டு பின்னர் முழுநேரமாக விவசாயம் செய்ய வேண்டும். எங்களிடம் உள்ள 2 ஏக்கர் நிலம் முழுவதையும் இயற்கை முறைக்கு மாற்றி, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தற்போது கத்தரி, வெண்டை, நெல் , உளுந்து போன்றவற்றை பயிரிட்டு அதில் லாபமும் பார்த்தும் வருகிறோம். விவசாயத்திலும் சரியான முறையில் செயல்பட்டு வந்தால் நிச்சயம் லாபம் இருக்கும் என்று தெரிவிக்கிறார் மாணவி ஜெயஶ்ரீ .

விவசாயமானது தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது. அனைவரும் மற்ற வேலைகளை தேடி செல்கின்றனர். அப்போது விவசாயத்தை யார் செய்வது. நாம், படிப்புடனும் அறிவுடனும் விவசாயத்தையும் காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் மாணவி ஜெயஶ்ரீ.

வாழ்க்கைக்கு படிப்பு வேலை முக்கியமான ஒன்று. அதேபோல் விவசாயமும் அனைவரின் வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போது விவசாயம் தெரிந்தவர்கள் பலர் இதை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கும் மற்ற வேலைகளுக்கும் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜெயஶ்ரீ போல அனைவரும் முன்னெடுத்து விவசாயம் செய்தால் அது வருங்காலத்தை சிறப்பாக்கும் என்பது நிச்சயம்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Agriculture, Local News, Pudukkottai