முகப்பு /business /

விதை விற்பனை லைசென்ஸ் புதுப்பித்தல்.. நாமக்கல் மாவட்ட விற்பனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

விதை விற்பனை லைசென்ஸ் புதுப்பித்தல்.. நாமக்கல் மாவட்ட விற்பனையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal District News | விதை விற்பனை லைசென்ஸை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட விதை விற்பனையாளர்களுக்கு துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

  • Last Updated :
  • Namakkal, India

விதை விற்பனை லைசென்ஸ்ஸை புதுப்பித்தல் தொடர்பாக சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “விதை விற்பனை லைசென்ஸ், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின், விதை ஆய்வு பிரிவின் விதை ஆய்வு துணை இயக்குநர் மூலம் வழங்கப்படுகிறது. இதன்படி விதை விற்பனை லைசென்சின் காலம் 5 ஆண்டுகளாகும். எனவே, விதை விற்பனை லைசென்ஸ் காலாவதி ஆவதற்கு ஒரு மாதம் முன்னரே உரிய ஆவணங்களுடன், சேலம் விதை ஆய்வு துணை இயக்குநருக்கு, விண்ணப்பித்து மேலும் 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். விதை விற்பனை உரிமம் புதுப்பிக்க https://seedcertification.tn.gov.in/ என்ற வெப்சைட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

வெப்சைட்டில் விண்ணப்பித்த பின்னர் விதை விற்பனை லைசென்ஸ் புதுப்பிக்க கோரும் விண்ணப்பம் (இ படிவம்), அசல் உரிமம், உரிமம் புதுப்பிக்க கட்டணம் ரூ. 500 செலுத்தியதற்கான சலான், கட்டிட வரைபடம், வாடகை கட்டிடமாயிருந்தால், புதுப்பிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தப் பத்திரத்தின் நகல், சொந்த கட்டிடமாயின் வீட்டு வரி ரசீது ஆகியவற்றுடன் இணைத்து அனுப்பவேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அவ்வாறு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விதை ஆய்வாளர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொண்ட பின் புதுப்பிக்கப்பட்ட விதை விற்பனை லைசென்ஸ் வழங்கப்படும். எனவே, அனைத்து விதை உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் உரிய காலத்தில் விதை விற்பனை லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு விதை ஆய்வாளரை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Agriculture, Local News, Namakkal