திருச்சி மாவட்டம் முசிறிக்கு அருகில் உள்ள திருத்தலையூர் மேலக்கொட்டம் என்னும் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளரி சாகுபடி செய்து வரும் விவசாயி நல்லபொண்ணு, வெள்ளரி சாகுபடி செய்வது பற்றி விவரித்தார்.
எவ்வளவு லாபம் கிடைக்கிறது?
இதுகுறித்து அவர் கூறுகையில், “விவசாயி தனது நிலத்தை டிராக்டர் கொண்டு ஒரு உழவு இட்டு அதனை வயல் முழுவதும் மண்ணோடு சீராக கலந்து உழுகின்றனர். தை மாதத்தில் விதை விதைக்கப்படுகிறது. 2 அடிக்கு 3 விதைகள் என்ற கணக்கில் விதை நடப்படுகிறது. வெள்ளரி சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும். 45 நாட்களுக்கு காய்கள் கிடைக்கும்.
சில காய்கள் பெரிதாகிவிட்டால் பயன் அற்று போகும் அவற்றை கால்நடை களுக்கு கொடுப்பதாகவும், பிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாக மாறி அதிக விதைகளைக் கொண்டு இருக்கும். இதனை விற்று லாபம் எடுக்க முடியாது. ஒரு சில பழம் 15 ரூபாய் வரை விலை போகும்போகும். விலை போகாத பழங்களின் விதைகளே அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்தப்படுகிறது.
மானியம் வழங்கப்படவில்லை
மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் வண்டியில் கிராமத்திலுள்ள விவசாயிகள் நிலங்களுக்கு நேரில் சென்று பிஞ்சு வெள்ளரியை விலைக்கு வாங்குகிச் செல்கின்றனர். சில நேரங்களில் அவர்களே மார்க்கெட்டிற்கு எடுத்துச் சென்று விற்கின்றனர். மேலும் இந்த 15 நாட்கள் பெய்த மழையால் நஷ்டம் ஏற்பட்டது. இதற்கான மானியம் வழங்கப்படவில்லை” என்று கூறினார்.
என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்?
மேலும் அவர் கூறுகையில், “பூசணி வண்டு, ஈயின் தாக்குதல் இருக்கும். அவற்றைக் கட்டுப்படுத்த செயற்கை மருந்துகளைப் பயன்டுத்துகின்றனர். பருவ மாற்றம் காரணமாக ஏற்படும் மழையால், காய்கள் வீணாவதுண்டு.
பயன்கள் என்ன?
95% நீர் சத்து கொண்டது, சாதாரண நீரை விட சத்து மிகுந்த நீரை கொண்டது. இதை அதிகம் சாப்பிட்டால் உடலின் வெப்ப நிலை சீராக இருக்கும். செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், குடல் புண் குணப்படுத்தி ஜீரணிக்க பெரிதும் உதவுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வெள்ளரி மிகவும் நல்லது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெற வெள்ளரி சாகுபடி சிறந்தது. இதற்கு அதிக நீர் தேவைப்படுவதில்லை. குறைந்த நாட்களில் செய்து முடிக்கலாம்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Trichy