முகப்பு /செய்தி /business / கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை நியாயமானது இல்லை... உயர்நீதிமன்றம்

கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை நியாயமானது இல்லை... உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம் - கரும்பு விலை

சென்னை உயர்நீதிமன்றம் - கரும்பு விலை

கரும்பு விவசாயிகளின் உழைப்புக்கு கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை (Fair and Remunerative Price -FRP ) நியாயமான சந்தை விலை கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், விவசாய சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு தொடர்ந்த மனுவில், தஞ்சாவூர் மற்றும் கடலூரில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு 157 கோடி ரூபாய் அளிக்க வேண்டியிருப்பதாகவும், ஆனால், ஆலை நிர்வாகம் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முழு தொகையும் தங்களால் வழங்க இயலாது எனவும், 57 சதவீத தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆலை நிர்வாகம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட 78 கோடி ரூபாயில் ஏற்கனவே வழங்கப்பட்ட 45 கோடி ரூபாய் போக, மீதமுள்ள 33 கோடி ரூபாயை மூன்று மாதங்களில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்க15 வருடங்களாக வற்றாத அதிசய ஆழ்துளை கிணறு! - 15 ஏக்கர் நிலத்திற்கும் ஒரே நீராதாரம்!

மேலும், கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலை நியாயமான சந்தை விலை கிடையாது எனவும், அவர்களின் உழைப்புக்கு கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் எனவும் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

First published:

Tags: Chennai High court