முகப்பு /business /

பறவைகள் படையெடுப்பால் மினி வேடந்தாங்கல் ஆன புதுச்சேரி பாகூர்!

பறவைகள் படையெடுப்பால் மினி வேடந்தாங்கல் ஆன புதுச்சேரி பாகூர்!

X
படையெடுக்கும்

படையெடுக்கும் பறவைகள்

Puducherry mini vedanthangal | புதுச்சேரியின்  நெல் களஞ்சியமான பாகூர் பகுதிகளில் சம்பா பருவ அறுவடை முடிந்துள்ள நிலையில் பாகூர் வயல்வெளி பகுதி பறவைகள் சரணாலயமாக காட்சி அளிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியின் நெல் களஞ்சியமான பாகூர் பகுதிகளில் சம்பா பருவ அறுவடை முடிந்துள்ள நிலையில் பாகூர் வயல்வெளி பகுதி பறவைகள் சரணாலயமாக காட்சி அளிக்கிறது.

புதுச்சேரியின் நெல் களஞ்சியமாக விளங்கக்கூடிய பாகூர் பகுதிகளில் சம்பா பருவ அறுவடை முடிந்துள்ளது.தற்போது அடுத்தபருவத்திற்கான உழவு பணிகள் நடைபெற்று வருகிறது.நெல் பயிர்களை நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் டிராக்டர் மூலமாக வயலை உழுது விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர்.

நிலத்தின் அடியில் இருந்து மேற்புறம் வரை கிளற படுவதால், நிலத்தடியில் உள்ள புழுக்கள், பூச்சிகள் வெளியே வருகிறது இதை உண்பதற்காக சாம்பல், செங்கால், வர்ண நாரைகள், கொக்கு, குருவி உள்ளிட்ட பறவைகள், விவசாய நிலங்களில் குவிகின்றன.ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் அப்பகுகளில் முகாமிட்டுள்ளதால் இந்த பகுதி ஒரு மினி வேடந்தாங்கலாக காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் விவசாயிகள் ஆர்வத்துடன் பறவைகளை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர்.

First published:

Tags: Bird Sanctuary, Birds, Local News, Puducherry