முகப்பு /வணிகம் /

உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்த கோவையில் விழிப்புணர்வு கண்காட்சி!

உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்த கோவையில் விழிப்புணர்வு கண்காட்சி!

X
கோவையில்

கோவையில் விழிப்புணர்வு கண்காட்சி

Coimbatore District News | கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் வேளாண்மைத் துறை சார்பில் கண்காட்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் வேளாண்மை துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய கண்காட்சி நடைபெற்றது.

உள்ளூர் பயிர் ரகங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை பிரபலப்படுத்தும் விதமாகவும் வேளாண்துறை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வேளாண்மைத் துறை சார்பில் உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியை பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா துவக்கி வைத்து வேளாண் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் அரங்குகளை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து சோளம், கம்பு மற்றும் ராகி சாகுபடி தொழில்நுட்பங்கள் அடங்கிய பிரசுரங்களை வெளியிட்டார். கண்காட்சியின் ஒரு பகுதியாக கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த கண்காட்சியில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கு செங்காம்பு கறிவேப்பிலை நாற்று, பாரம்பரிய வெண்டை விதை, பேனா, நோட், அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத் தொடர்ந்து உள்ளூரில் உயர் ரக பயிர் ரகங்கள் எவை? அவற்றை பயன்படுத்தும் முறைகள் என்ன? என்பது குறித்து வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர். இந்த கண்காட்சியில் வேளாண் அதிகாரிகள், வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Agriculture, Coimbatore, Local News