முகப்பு /வணிகம் /

 திருவண்ணாமலையில் கூட்டுறவு நிறுவனங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் அறிவிப்பு..!

 திருவண்ணாமலையில் கூட்டுறவு நிறுவனங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் அறிவிப்பு..!

திருவண்ணாமலை கூட்டுறவு சங்க முகாம் (மாதிரிப்படம்)

திருவண்ணாமலை கூட்டுறவு சங்க முகாம் (மாதிரிப்படம்)

Thiruvannamalai | கூட்டுறவு நிறுவனங்களில் புதிய உறுப்பினர் சேருவதற்கு என்னென்ன தேவை என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலை மண்டலத்தில் செயல்படும் 230 கூட்டுறவு நிறுவனங்களில் வருகிற மே மாதம் 15-ந்தேதி வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையான அட்டை, தொடர்புடைய நிறுவனத்தால் கோரும் ஆவணங்களுடன் அனைத்து அலுவலக நேரங்களிலும் சென்று உறுப்பினராக சேரலாம்.

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன்கள் குறித்த முழு விவரம் பின்வருமாறு:-

1. வட்டி இல்லா பயிர்கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன்

2. மாற்றுத்திறனாளிகள் கடன்கள்

3.குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன்

4. தானிய ஈட்டு கடன்

5. மகளிர் சுய உதவி குழு கடன் மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீத வட்டியிலான கடன்கள்

6. தமிழ்நாடு பிற்படுத்தப்பட் டோர் மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீத வட்டியிலான கடன்கள்

7. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீத வட்டியிலான கடன்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

8. மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் 4 சதவீத வட்டியிலான கடன்கள்

9. அரசு அறிவிக்கும் உதவிகள் அனைத்தையும் பெற்று பயன் பெறலாம்.

top videos

    இந்த தகவலை திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Local News, Tiruvanamalai