புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பெரும் அளவில் மல்லி, முல்லை போன்ற வாசனை மலர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆலங்குடி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும் என மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் மலர்கள் சாகுபடியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் விவசாயி பாலகிருஷ்ணன் பேசும்போது, ”வடகாட்டில் பெரும் அளவு மல்லிகை, முல்லை சாகுபடி நடைபெற்று வருகிறது. பண்டிகை நாட்களில் மலர்கள் ஒரு கிலோ ரூ.1000 முதல் விலைபோகிறது. ஆனால் மற்ற நாட்களில் ரூ.100 வரை தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இங்கு அதிக அளவில் மலர்கள் செழித்து வளர்கின்றன. வருடத்திற்கு ரூ.20,000 செலவழித்தாலும் ரூ.50,000 கிடைக்கும். பூச்சி தொந்தரவு மலர் சாகுபடியில் அதிகம் உள்ளது.
வாரத்திற்கு 3 முறை மருந்து தெளித்து பராமரிப்பு செய்து வருகிறோம். ஆனாலும் நன்கு விளையக்கூடிய இந்த மலர்கள் விவசாயத்தை நாங்கள் கைவிடும் நிலைக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டோம். ஏனென்றால் பண்டிகை நாட்களில் மட்டும் விலை போகும் மலர்களால் எங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஏனென்றால் மற்ற நாட்களில் அடிமாட்டு விலைக்கு எடுத்து செல்கின்றனர். பறிக்கும் கூலிக்கு கூட கட்டுபடி ஆகவில்லை. எனவே புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அப்படி அமைக்கப்பட்டால் நாங்கள் ஆலைக்கு நேரடியாக மலர்களை அனுப்பிவிடுவோம். எப்போதும் ஒரே சீரான விலை கிடைக்கும். இதனால் எங்கள் வாழ்விலும் ஏற்றம் வரும். இதனால் எங்கள் மாவட்டத்தில் ஒரு வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Pudukkottai