முகப்பு /business /

மதுரை விவசாய கல்லூரியில் விவசாய கண்காட்சி.. என்னென்ன சிறப்புகள்?

மதுரை விவசாய கல்லூரியில் விவசாய கண்காட்சி.. என்னென்ன சிறப்புகள்?

X
மதுரை

மதுரை விவசாய கல்லூரியில் விவசாய கண்காட்சி

Agriculture Exhibition At Madurai : மதுரை ஒத்தக்கடை பகுதி உள்ள விவசாய கல்லூரியில் விவசாயத்திற்கு தேவையான பல்வேறு பொருட்கள் விவசாய கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை ஒத்தக்கடை பகுதியில் விவசாயிகளுக்கு என பிரத்தியேகமாக இயங்கி வரும் விவசாய கல்லூரியில் விவசாய கண்காட்சி நடைபெறுகிறது.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ் சேகர் துவக்கி வைத்த இந்த கண்காட்சியில், விவசாயத்திற்கு தேவையான கருவிகளான நடவு முதல் அறுவடை செய்யும் எந்திரம், களை எடுப்பு எந்திரம், டிராக்டர்கள் என அதிநவீன தொழில்நுட்ப எந்திரங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விவசாயிகளுக்கு தேவையான கொய்யா, நெல்லி, செம்மரம், தேக்கு மரம், எலுமிச்சை மரம், மாமரம் போன்ற மர வகை கன்றுகளும், சிறுதானிய உணவுகளும், இயற்கை முறை மூலம் செய்யப்பட்ட மூலிகை மருந்துகளும், தின்பண்டங்களும், விவசாயம் மண்ணிற்கு சத்துக்களை தரக்கூடிய இயற்கையான உரங்களும், மாடி தோட்டத்திற்கான விதைகளும், விவசாய புத்தகள் எனஇந்த கண்காட்சியில் ஏராளமான பொருட்கள்இடம்பெற்றுள்ளன.

மேலும், விவசாயத்திற்கு கடன் வழங்குவதுகுறித்த வங்கி ஸ்டால்கள் என முப்பதுக்கு மேற்பட்ட ஸ்டால்கள் இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி இலவசமாக வழங்கப்படும் இந்த கண்காட்சியை விவசாயிகளும், பொதுமக்களும் பார்வையிட்டு பயனடைந்து செல்கின்றனர்.

top videos
    First published:

    Tags: Agriculture, Local News, Madurai