முகப்பு /வணிகம் /

விவசாய நிலங்களில் ஈரப்பதத்தை தக்கவைக்க விவசாயிகள் இதை முயற்சிக்கலாமே..!

விவசாய நிலங்களில் ஈரப்பதத்தை தக்கவைக்க விவசாயிகள் இதை முயற்சிக்கலாமே..!

X
நெகிழி

நெகிழி மண் போர்வை

Nellai agriculture news | விவசாயிகள் தங்களது நிலங்களில் செய்யக்கூடிய வேலைகளில் வேளாண்துறை பல்வேறு எளிய முறைகளை ஆலோசனைகளாக வழங்கி வருகிறது.

  • Last Updated :
  • Tirunelveli, India

விவசாய நிலங்களில் கோடையில் நீர் ஆவியாவதை தடுக்க நெகிழி மண் போர்வையை பயன்படுத்தலாம் என வேளாண்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது.

மண் ஈர பாதுகாப்புக்கும் பயிர் வளர்ச்சிக்கும் ஏற்ற சாதகமான சூழ்நிலையை உருவாக்க பயிரை சுற்றி உள்ள பகுதிகளில் தகுந்த வேளாண் கழிவுகளை மண்மீது பரப்புவது மன்போர்வை எனப்படும்.

இயற்கையாக கிடைக்கக்கூடிய வைக்கோல், வாழை மட்டை தென்னை, நாற்கழிவு, சோளத்தட்டை போன்ற வேளாண் கழிவு பொருட்கள் கிடைப்பது மிக அரிதாக உள்ளது. இந்நிலையில் அண்மைக்காலமாக செயற்கை இழை பொருளான நெகிழி மண் போர்வையின் பயனை முழுவதுமாக மாற்றி அமைத்துள்ளது நெகிழி மண் போர்வையின் பயன்பாடுகளை பொறுத்து குறைந்த அடர்வு கொண்ட பாலிதீன் அதிக அடர்வு கொண்ட பாலிதீன் தாள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிக தடிமன் உள்ள தாளை பழப்பயிர்கள் காபி தேயிலை போன்ற பயிர்களுக்கு பயன்படுத்தலாம் ஆனால் பெரும்பாலும் குறைந்த அடர்வு பாலிதீன் தாள்களே அதிக அளவில் பயன்படுத்துகின்றன.

இவ்வகையான மண்போர்வைகள் நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கக் கூடியவை. மானாவாரி நிலத்திலும் பாசன வசதி உள்ள தோட்ட நிலத்திலும் பிளாஸ்டிக் மண் போர்வை முக்கிய பங்காற்றுகிறது வேளாண் கழிவுகளான மண்போர்வையால் மூடப்பட்ட இடங்களில் குறைந்த அளவே மழை பாசன நீர் ஊடுருவைச் செல்லும் இயலும் ஆனால் நெகிழித்தாளின் அடியில் உள்ள மண்ணில் உள்ள நீர் ஆவியாகி பின்னர் தாளின் கீழ் பாகத்தில் குளிர்ந்து மறுபடியும் மண்ணிலேயே விழுவதால் பிளாஸ்டிக் போர்வையின் கீழ் உள்ள மண்ணின் ஈரம் தாள் இடப்படாத மண்ணில் ஈரப்பதத்தை விட சுமார் 30 சதவீதம் அதிகமாக உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மண்ணில் உள்ள நீர் நேரடியாக ஆவியாகி வெளியேறுவதையும் நீர் ஊடுருவலையும் முழுவதுமாக தடுப்பதால் . மண் ஈரம் பாதுகாக்கப்படுவதுடன் மண்ணில் உள்ள உப்பு மேல் நோக்கி வருவது தடுக்கப்படுகிறது. மண்ணில் இடக்கூடிய சத்துப் பொருட்கள் நீருடன் கலந்து பயிரின் வேருக்கு கீழ் வெளியேறி செல்வது தடுக்கப்படுகிறது இரவு மற்றும் குளிர்காலத்தில் மண்ணின் வெப்பத்தை சீரான அளவில் நிலை நிறுத்தி பயிர் சிறந்த வளர்வதற்கு . விதைகளின் முளைவிடும் தன்மையை துரித படுத்துவதற்கும் உதவிக்குகின்றன.

இதையும் படிங்க | நெல்லை மாணவர்களே.. சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விருப்பமா? விண்ணப்பிக்க வழிமுறை இது தான்..

பயிர்களின் தேவை பயன்படுத்தும் பருவம் மண்போர்வை பயன்படுத்துதல் நோக்கம் ஆகியவற்றை பொறுத்து அதற்கேற்ப நெகிழி தாள்களை தேர்வு செய்ய வேண்டும் கருப்பு நிற தாள் நிலத்தை சூடாக்கி பயிரை தாக்கக்கூடிய நூற்புழு . போன்றவைகளையும் களை விதைகளையும் அழிக்க வல்லது . மணற் பாங்கான நீளங்களுக்கும் உப்பு நீரை . பயன்படுத்தும் நிலங்களுக்கும் ஏற்றது.

தங்கம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம் உடையதால் பூச்சிகளை கவர்ந்திழுக்கும் தன்மையுடையது அதன் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் .வெள்ளை நிற தாள் குளிர்ந்த சூரிய ஒளி பரவும் இடத்தில் ஒளியினை பிரதிபலித்து பயிர்களின் கீழ் மற்றும் இடையில் உள்ள இலைகளுக்கு கிடைக்க செய்கிறது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Agriculture, Local News, Nellai, Tirunelveli