முகப்பு /செய்தி /வணிகம் / உழவு செய்ய இப்படி ஒரு கண்டுபிடிப்பா? ரூ.3000 செலவில் சாதித்த பீகார் விவசாயி!

உழவு செய்ய இப்படி ஒரு கண்டுபிடிப்பா? ரூ.3000 செலவில் சாதித்த பீகார் விவசாயி!

தினேஷ் யாதவ்

தினேஷ் யாதவ்

உழவுக்காக டிராக்டர் உரிமையாளரிடம் உதவி கேட்டு அழைந்த இளைஞர் இப்பிரச்னைக்கு தீர்வாக தானே ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தின் சௌராபஜார் பிளாக் பகுதியில் வசிக்கும் தினேஷ் குமார் யாதவ் 3000 ரூபாய் செலவழித்து தன் பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டறிந்துள்ளார். இந்த தீர்வைப் பார்த்து, அருகிலுள்ள மற்ற விவசாயிகளும் அதை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இப்போது தினேஷ் வயலை உழுவதற்கு டிராக்டர் உரிமையாளரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை.

தினேஷுக்கு 2-3 சிறிய பண்ணைகள் உள்ளன. உழவுக்காக டிராக்டர் உரிமையாளரிடம் பலமுறை உதவி கேட்டு வந்துள்ளார். இவரது பண்ணை தூரமாகவும் சிறியதாகவும் இருந்ததால், டிராக்டர் எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் பல நாட்கள் அவரை அலைய விட்டார்களே தவிர, யாரும் தர தயாராக இல்லை.

இப்படியொரு சூழ்நிலையில் ஒரு நாள் வீட்டில் அமர்ந்திருந்தபோது அப்பா வைத்திருந்த உடைந்த கலப்பையில் தினேஷின் கண்கள் விழுந்தன. அதைப் பார்த்த அவருக்கு ஒரு தீர்வு காணும் யோசனை வந்தது. தினேஷ் ஒரு சைக்கிளின் உதவியுடன் தீர்வை கண்டறிய முயன்றார். அதன் பிறகு முன் சக்கரம், கைப்பிடி மற்றும் தேவையான பொருட்களை சந்தையில் இருந்து ரூ.1500-க்கு வாங்கினார். மெக்கானிக் உதவியுடன் ஒரு தீர்வை கண்டுப்பிடித்தார். இப்போது அவர்களின் பணமும் சேமிக்கப்படுகிறது. டிராக்டர் இல்லாமலே வயலை உழுது விடுகிறார்கள்.

இந்த கலப்பையை இழுக்க உடலில் சக்தி தேவைப்படுவதாகக் குறிப்பிடும் தினேஷ், இது காலை உடற்பயிற்சியாக மாறுகிறது என்கிறார். அவர் கலப்பையால் வயல்களை உழுவதைச் சுற்றியிருந்தவர்களும் பார்த்திருக்கிறார்கள். இப்போது அவர்களும் இதே போன்ற ஒரு தீர்வை நாடுகிறார்கள். நெல் விதைகளை விதைப்பதற்கு அல்லது நாற்று நடவு செய்வதற்கு வயலை தயார் செய்வதற்கு இது சிறந்தது. 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே தயாரிப்பு செலவு.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published: