முகப்பு /செய்தி /வணிகம் / வேளாண் பட்ஜெட்... இயற்கை விவசாயத்திற்கு ரூ.26 கோடி... சிறந்த விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு..!

வேளாண் பட்ஜெட்... இயற்கை விவசாயத்திற்கு ரூ.26 கோடி... சிறந்த விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு..!

வேளாண் பட்ஜெட்

வேளாண் பட்ஜெட்

வேளாண் நிதிநிலை அறிக்கையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது, ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

குறிப்பாக, 2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என்றும், இயற்கை உரம் தயாரிக்கக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் கூறினார்.

Also Read : விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு... வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு..!

மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படுவதோடு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு முழுவதும் 14,500 ஹெக்டேரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள 750 தொகுப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Agriculture, Farmers, TN Budget 2023