முகப்பு /வணிகம் /

ஆச்சரியப்படுத்தும் 27HP மினி ட்ராக்டர்.. இதில் இத்தனை விவசாய வேலைகளை செய்ய முடியுமா?

ஆச்சரியப்படுத்தும் 27HP மினி ட்ராக்டர்.. இதில் இத்தனை விவசாய வேலைகளை செய்ய முடியுமா?

X
27HP

27HP மினி ட்ராக்டர்..!

Agricultural machinery | டிராக்டருக்கு இணையான ‘மினி டிராக்டர்’ நீங்களும் ஆகலாம் ஸ்மார்ட் விவசாயி.. குறைந்த நிலப்பரப்பில் விவசாயம் செய்பவர்களுக்கு உகந்த விவசாய கருவி.. வாங்க டீடெய்லா பாக்கலாம்...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தற்போது இருக்கும் நவீன உலகத்தில் விவசாயத்தை எளிமையாக்க புது புது விதமான இயந்திரங்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. இதெல்லாம் சாத்தியமா நடக்குமா என்று இக்காலகட்டத்தில் நாம் எதையும் தீர்மானிக்க முடியாது காலங்கள் மாற மாற நம் வேலைகளை எளிமையாக்க புது புது விதமான இயந்திரங்கள் கருவிகள் வந்துகொண்டே தான் இருக்கிறது.. அதன் நீட்சி விவசாயத்திலும் தொடர்ந்து வருகிறது..

அந்த வகையில் விவசாயத்திற்கு டிராக்டர்-கள் முக்கிய பங்கு வகித்தது வருகிறதுஆனால் எல்லோராலும் 47HP கொண்ட பெரிய வகை ட்ராக்டர்களை வாங்க முடியாது... குறைந்த ஏக்கரில் விவசாயம் செய்பவர்களுக்கு அது தேவையற்றதாகவும் இருந்தது...தேவையானபோது பல விவசாயிகள் வாடகைக்கு எடுத்து செல்வார்கள்..

சிறிய டிராக்டர் : ஆனால் தற்போது தேவைக்கேற்ற இயந்திரங்கள் வர தொடங்கியிருக்கிறது.. பல ஆண்டுகளுக்கு முன்பு VST Sakthi நிறுவனம் குபேட்டா என்ற சிறிய வடிவிலான இயந்திரத்தை அறிமுகப்படுத்திய நிலையில் விவசாயிகளுக்கு ஒர் வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. அதே போல் விவசாயத்தை மேலும் எளிதாக்கும் வகையில் தேவைக்கேற்ற இயந்திரங்களை விவசாயிகள் வாங்கி பயனடைய ட்ராக்டரில் 18,22,27 HP கொண்ட தேவைக்கேற்ப சிறிய அளவிலான ட்ராக்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...

Read More : "அண்ணாமலையின் பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..” - மாணிக்கம் தாகூர் விமர்சனம்!

இந்த சிறிய அளவிலான ட்ராக்டர்களை பல விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்...அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்கிற விவசாயி கடந்த 5 மாதங்களுக்கு VST SAKTHI 27 HP ட்ராக்கட்டரை வாங்கி பல விதமான விவசாய பயண்பாடுகளுக்கு பயண்படுத்தி வருகிறார்...

இது குறித்து விவசாயியிடம் நேரடியாக சென்று கேட்ட போது அவர் கூறுகையில்:

நான் 7 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன் பெரிய அளவில் உள்ள 47 HP ட்ராக்டர் எனக்கு தேவையற்றது. எனது தேவைக்கேற்ப ட்ராக்டர் தஞ்சை வடக்குப்பட்டு அருகே உள்ள Kap mottors -ல் VST sakthi நிறுவனத்தின் சிறிய அளவில் உள்ள ட்ராக்டரை பார்த்ததும் வாங்க தோன்றியது. 6.லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்க்குவாங்கினேன். தற்போது வாங்கி 5 மாதங்களுக்கு மேல் பயண்படுத்தி வருகிறேன்..

ஏறு உழவுவதற்கு, அருமையாக இருக்கிறது.. லைட் வெயிட்டாக இருப்பதால் சேற்றில் உட்காராமல் ஓட்டுகிறது, மேலும் இதில் 3 அடி உள்ள இடத்தில் கூட எளிமையாக ஓட்டுவதறக்கு ஏற்றதாக உள்ளது, பெரிய ட்ராக்டரை எல்லா இடங்களிலும் இயக்க முடியாது ஆனால் இது சிறியதாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் வளைந்து கொடுக்கிறது.

டீசல் பயன்பாடு

மேலும் இதில் டிப்பர் , டயர் வண்டி, 8.4 ட்ராலி ஆகியவற்றையும் இணைத்து சுமார் 3 யூனிட் அளவு வரை வெயிட் ஏற்றலாம், தென்னந்தோப்பில் ஓட்டுவதற்கு உகந்ததாக உள்ளது, பார் போடவும் பயண்படுத்தலாம், ரொட்ட வேட்டரை கழட்டி கடலைக்கு பார் போடும் ரொட்ட வேட்டரையும் இணைக்கலாம், தென்னம் புள்ளைக்கு பாத்தி கட்டுவதற்கும் பயண்படுத்தலாம், சேற்றில் ஓட்டும் போது சுமார் 1 மணி நேரத்திற்கு அதிகப்பட்சமாக 1.5 - 2 லிட்டர் அளவு வரை டீசல் செலவாகிறது..

சாலையில் இயக்கும் போது 15-20 கி.மீ வரை மைலேஜ் தருகிறது.. 27 HP கொண்ட இந்த வண்டி ரொட்ட வேட்டர் இல்லாமல் சுமார் 750 கிலோ இருப்பதாலும், சிறிய தாக இருப்பதாலும், புல்லிங் பவர் அதிகமாக இருப்பதாலும், அனைத்து வேலைகளுக்கும் பயன்படுகிறது, இயக்குவதற்கும் மிக எளிதாக உள்ளது,விவசாயத்தை ஸ்மார்ட் -ஆக செய்ய முடிகிறது..எனக்கு இந்த ட்ராக்டரை வாங்கியதில் மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Agriculture, Local News, Thanjavur