முகப்பு /செய்தி /வணிகம் / ஆதார் கார்டு புதுப்பிக்க உத்தரவு.. ஆன்லைன் மூலம் அப்டேட் செய்வது எப்படி?

ஆதார் கார்டு புதுப்பிக்க உத்தரவு.. ஆன்லைன் மூலம் அப்டேட் செய்வது எப்படி?

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

நீங்கள் வருகின்ற ஜூன் 14, 2023 வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் நீங்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

 • Last Updated :
 • Tamil Nadu, India

இந்திய மக்களின் அத்தியாவசிய பயன்பாடுகளில் ஒன்றாகிவிட்டது ஆதார் அடையாள அட்டை. வங்கி பரிவர்த்தனை முதல் அனைத்துப் பயன்பாட்டிற்கும் இப்போது ஆதார் தேவைப்படுகிறது என்பதால் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது. நீங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்களது அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே நீங்கள் ஆதார் அட்டையை வாங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால், தற்போதுள்ள சான்றிதழ் படி புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்கிறது UIDAI.

இதன் படி நீங்கள் வருகின்ற ஜூன் 14, 2023 வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் நீங்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் அடையாளச் சான்று மற்றும் முகவரிச்சான்று போன்ற ஆவணங்கள் கொடுத்து புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதோ எப்படி என இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

top videos

  ஆன்லைனில் ஆதார் புதுப்பிக்கும் முறை: 

  ஆன்லைனில் நீங்கள் ஆதாரைப் புதுப்பிக்க வேண்டும் என்றால், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது mAadhaar ஆப் மூலம் 'மின்னஞ்சல்/மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும்.
  பின்னர் நீங்கள் குடியிருப்பாளரின் மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணுடன் உங்களது ஆதார் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒருவேளை உங்களது குறிப்பிட்ட மொபைல் எண் இணைக்கப்படவில்லை என்றால், உங்களது மொபைல் எண்ணைப் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று நீங்கள் உங்களது மொபைல் எண்ணைப் புதுப்பிக்க வேண்டும். பின்னர் உங்களது முகவரி எதுவும் மாறி இருக்கும் பட்சத்தில், புதிய முகவரியை நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும். இதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், Document Update யை கிளிக் செய்து சரிபார்க்கவும்.
  இதன் பின்னர் நீங்கள் புதிதாக மாற்றம் செய்யவுள்ள பெயர் மற்றும் முகவரி சான்றுக்கான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும்.
  இதையடுத்து உங்களது மொபைல் எண்ணுக்கு service request number அனுப்பப்படும். இதை வைத்து நீங்கள் உங்களது ஆதாரில் புதிய ஆவணங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து டிராக் செய்து கொள்ளலாம்.
  ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே நீங்கள் கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை என்றால், அவர் மியாதார் போர்ட்டல் அல்லது mAadhaar செயலியில் ஆதார் அம்சத்தை சரிபார்ப்பதில் மொபைலின் கடைசி மூன்று இலக்கங்களை சரிபார்க்கலாம். .இருப்பினும், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க, குடியிருப்பாளர் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  First published:

  Tags: Aadhar, Business