முகப்பு /செய்தி /வணிகம் / கிரெடிட் கார்டு வரி கூடுது.. ஜூலை 1 முதல் வருகிறது புதிய விதிமுறை..

கிரெடிட் கார்டு வரி கூடுது.. ஜூலை 1 முதல் வருகிறது புதிய விதிமுறை..

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டை உபயோகப்படுத்துவதற்கு வசூலிக்கப்படும் வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெளிநாடுகளில் இந்தியர்கள் தங்களது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலவு செய்யும் தொகைக்கு 20 சதவீதம் அதிக வட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1 தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

மருத்துவச் சிகிச்சையைத் தவிர இதர அனைத்து விதமான கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு இனி இந்த புதிய நடைமுறைப்படி வரி வசூலிக்கப்படும். இந்த புதிய நடைமுறையால், முக்கியமாகச் சுற்றுலா செல்பவர்கள், அவசர பயணத்திற்கு விமான டிக்கெட் புக் செய்பவர்கள் போன்றவர்கள் கண்டிப்பாகப் பாதிக்கப்படுவார்கள்.

ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் வரும் LRS எனப்படும் Liberalised Remittance Scheme கீழ் வருடத்திற்கு 2 கோடி ரூபாய் (250000 டாலர்) வரையில் வெளிநாட்டில் பணம் செலவு செய்யலாம். வெளிநாடுகளில் இந்திய கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யும் போது அவை LRS கீழ் வராது. ஆனால், ஜூலை 1 ஆம் தேதி முதல் அனைத்து வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகளும் LRS கீழ் கொண்டுவரப்படும்.

முன்பு வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 5 சதவீதம் மட்டும் வரி செலுத்தவேண்டி இருந்தது. தற்போது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் TCS கீழ் கொண்டுவரப்படுவதால், 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

Also Read : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்திய மத்திய - மாநில அரசுகள்..விவரங்கள் இதோ..

top videos

    TDS, TCS என்று இரண்டு வகையான வரிகள் வசூலிக்கப்படுகிறது. TDS என்றால் தனிநபரிடம் வருமானத்தில் இருந்து நேரடியாக வசூலிப்பது. TCS என்றால் ஒரு பொருளை வாங்கும் போது விற்பனையாளரிடம் மூலம் வசூலிப்பது. அது அரசிடம் செலுத்தப்படும். இந்த புதிய விதிமுறைகளினால், வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு உபயோகிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    First published:

    Tags: Credit Card