முகப்பு /செய்தி /வணிகம் / வெளிநாட்டு வேலையில் இவ்வளவு லாபம் இருக்கா..? உலக வளர்ச்சி அறிக்கை..

வெளிநாட்டு வேலையில் இவ்வளவு லாபம் இருக்கா..? உலக வளர்ச்சி அறிக்கை..

மாதிரிப்படம்...

மாதிரிப்படம்...

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இந்தியர்களுக்கு 120 விழுக்காடு வருவாய் அதிகம் கிடைப்பதாக உலக வளர்ச்சி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியர்கள் இல்லாத வெளிநாடுகளே இல்லை என்று சொல்லலாம். இந்த அளவிற்கு உலகின் பல நாடுகளிலும் இந்தியர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் சாதாரண கூலி வேலை செய்வதில் இருந்து அரசின் முக்கியமான பொறுப்புகள், தனியார் துறையில் உயர் பதவிகள் என பல படிமங்களில் இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். உலகின் பெரும்பலான நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு கனிசமாக இருக்கிறது. அப்படி வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இந்தியர்களுக்கு எந்த அளவிற்கு வருவாய் லாபம் கிடைக்கிறது என்பது குறித்து உலக வளர்ச்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லுமு் இந்தியர்களுக்கு உள்நாட்டில் கிடைக்கும் ஊதியத்தை விட 120 விழுக்காடு வரை அதிகம் கிடைக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.நடுத்தர வேலை செய்யும் லோ ஸ்கில்டு ஊழியர்கள் அமெரிக்காவிற்கு வேலைக்காக சென்றால் அவர்களுக்கு 500 விழுக்காடு வரை வருவாய் அதிகரிப்பதாகவும், அதே வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு 300 விழுக்காடு வருவாய் அதிகரிப்பு கிடைக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் மருத்துவர்கள், ஐடி தொழில்நுட்ப துறையினர் போன்ற ஹை ஸ்கில்ட் நபர்களுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பு இன்னும் அதிகம் என்கிறது அந்த அறிக்கை. இந்த வருவாய் உயர்வு தொழிலாளர்கள் செல்லும் நாடு மற்றும் அவர்களது வயது உள்ளிட்ட காரணிகளால் மாறுபடும்.

அதே நேரம் இப்போதைய சூழலில் வெளிநாடுகளுக்கு செல்லும் கட்டணமும் கனிசமாக அதிகரித்துள்ளதாகவும் உலக வளர்ச்சி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து கத்தார் நாட்டுக்கு செல்லும் ஒருவர் தான் அங்கு சென்றதற்கான கட்டணத்தை திரும்ப பெற இரண்டு மாதம் வேலை செய்ய வேண்டுமாம். ஆண்டிற்கு சுமார் உலகம் முழுவதும் பத்து கோடியே 84 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு குடிப்பெயர்வதாகவும், அவர்களில் 3 கோடியே 70 லட்சம் பேர் பல்வேறு காரணிகளால் அகதிகளாக்கப்பட்டவர்கள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More : அட்டகாச பிஸினெஸ் ஐடியா.. ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.50000 சம்பாதிக்கலாம்..!

இந்தியா-அமெரிக்கா, இந்தியா-வளைகுடா நாடுகள் மற்றும் வங்கதேசம்-இந்தியா போன்றவை தான் உலகின் பெரிய இடம் பெயர்தல் நடைபெறும் நாடுகளாகும். இப்படி வெளிநாடுகளுக்கு வேலைக்காக புலம் பெயரும் இந்தியர்கள் அனுப்பும் பணத்தின் அளவும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

top videos

    குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் தங்களின் வருமானத்தில் 70 விழுக்காடு வரை இந்தியாவில் இருக்கும் தங்கள் உறவினர்களுக்கு அனுப்பி வைக்கிறாாகள் என்கிறது உலக வளர்ச்சி அறிக்கை. ஒவ்வொரு ஆண்டுமே இது போன்ற வேலைக்கான புலம்பெயர்தல் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது உலக வளர்ச்சி அறிக்கை.

    First published:

    Tags: India, Trending