முகப்பு /செய்தி /வணிகம் / வருமான வரி செலுத்துபவர்களாக நீங்கள்..? இன்னும் 2 நாள்களில் வரப்போகும் 10 புதிய மாற்றங்கள்....

வருமான வரி செலுத்துபவர்களாக நீங்கள்..? இன்னும் 2 நாள்களில் வரப்போகும் 10 புதிய மாற்றங்கள்....

மாதிரிப்படம்..

மாதிரிப்படம்..

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வருமான வரி முறையில் டிடிஎஸ் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 7 லட்சத்திற்குள் வருமானம் பெற்றவர்கள், புதிய வருமான வரி முறையை தேர்வு செய்திருந்தால் உங்களுக்கு டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்படாது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடப்பு நிதியாண்டு வருகின்ற மார்ச் 31, 2023 முடிவடையவுள்ள நிலையில், வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அதாவது இன்னும் 2 நாள்களில் புதிய நிதியாண்டில் வருமான வரி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்நிலையில் என்னென்ன புதிய மாற்றங்கள்? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்..

புதிய வருமான வரி விதிப்பில் வரவுள்ள புதிய மாற்றங்கள்:

மாத சம்பளம் வாங்குவோர்களுக்காக… ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வருமான வரி முறையில் டிடிஎஸ் குறைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூபாய் 7 லட்சத்திற்குள் வருமானம் பெற்றவர்கள், புதிய வருமான வரி முறையை தேர்வு செய்திருந்தால் உங்களுக்கு டிடிஎஸ் வரி பிடித்தம் செய்யப்படாது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இது மட்டுமின்றி ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் உள்ள தனி நபர்களுக்கு, புதிய வரி விதிப்பின் கீழ், கூடுதல் கட்டணமாக 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படலாம்.

Read More : ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. சிலிண்டர், பெட்ரோல் விலை லிஸ்டில் இடம்பெறுமா?

புதிய வரி விகித அடுக்குகள்…பழைய வருமான வரி விதிப்படி, ரூபாய் 3 லட்சம் வரை வருமானம் இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால் புதிய வருமான வரி விதி மாற்றங்களின் படி, இனிவரும் காலங்களில் தனி நபர் வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் என்றால் 5 சதவீத வரியும், ரூ.6 முதல் ரூ. 9 லட்சம் வரை 10 சதவீதம், ரூ. 9 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சம் வரை 15 சதவீதம், ரூ. 12 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சம் வரை 20 சதவீதம், ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.

இது போன்று இருக்கும் இன்னும் சில புதிய மாற்றங்கள்..

விடுப்பு பணப்பரிமாற்றம்… புதிய வருமான வரி விதிப்பின் படி, அரசு அல்லாத ஊழியர்களுக்கான விடுப்பு பணப்பரிமாற்றம் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்த வரம்பானது கடந்த 2002 முதல் ₹3 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ₹25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மியூச்சுவல் பண்ட்களுக்கு….மியூச்சுவல் ஃபண்டுகளில் LTCG வரிச் சலுகை இல்லை. அதே சமயம் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், கடன் பரஸ்பர நிதிகளில் முதலீடுகள் குறுகிய கால மூலதன ஆதாயங்களாக வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் பத்திரங்கள்…ஏப்ரல் 1க்குப் பிறகு சந்தையுடன் இணைக்கப்பட்ட கடன் பத்திரங்களில் (எம்எல்டி) முதலீடு குறுகிய கால மூலதனச் சொத்துகளாக இருக்கும்.
ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள்.. ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தின் வருடாந்திர பிரீமியமான ரூபாய் 5 லட்சத்திற்கு புதிய நிதியாண்டு முதல் அதாவது ஏப்ரல் 1, 2023 முதல் வரி விதிக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான நன்மைகள்.. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான அதிகபட்ச டெபாசிட் வரம்பு ரூபாய் 15 லட்சத்தில் இருந்து ரூபாய் 30 லட்சமாக உயர்த்தப்படவுள்ளது.
 இதே போன்று மாதாந்திர வருமான திட்டத்திற்கான அதிகபட்ச டெபாசிட் வரம்பு ஒற்றை கணக்குகளுக்கு ரூபாய் 4.5 லட்சத்தில் இருந்து ரூபாய் 9 லட்சமாகவும், கூட்டு கணக்குகளுக்கு ரூபாய் 7.5 லட்சத்தில் இருந்து ரூபாய் 15 லட்சமாகவும் உயர்த்தப்படவுள்ளது.
தங்கத்தின் மீதான வரிகளுக்கு.. வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மின்னணு தங்கத்தை நிஜ தங்கமாகவும், நிஜ தங்கத்தை மின்னணு தங்கமாக மாற்றிக்கொள்வதற்கான மூலதன ஆதாய வரி விதிக்கப்படாது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
First published:

Tags: Business, Income tax