ஜப்பானைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான யமாஹா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 50 ஆண்டுகளாக இந்தியாவில் தனது மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. அதிலும் யமாஹா நிறுவனத்தின் ஆர் எக்ஸ்-100 பைக் இந்திய பைக் ஆர்வலர்களின் கனவு பைக் என்றே சொல்லலாம். 2 ஸ்ட்ரோக் பைக்கான அதன் உற்பத்தி நிறுத்தப்பட்ட பிறகும் அந்த பைக் விண்டேஜ் பைக் போல மரியாதை பெற்றுள்ளது. இப்போது யமாஹா நிறுவனம் ஸ்கூட்டர் தயாரிப்பிலும் இறங்கிக் கலக்கி வருகிறது.
வரும் காலத்தில் தங்கள் வாகனங்களை ஓட்டும் யாரும் விபத்தில் சிக்கி உயிரை இழந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் செல்ஃப் பேலன்சிங் தொழில்நுட்பத்தை தங்கள் வாகனங்களில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது யமாஹா நிறுவனம். ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு கட்டங்களாகச் சோதித்துப் பார்த்துள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பத்தைத் தனது ஆர்-25 ரக பைக்குகளில் சோதித்தது பார்த்துள்ளது.
எசல்ஃப் பேலன்சிங் தொழில் நுட்பம் என்ன?
பைக்கை ஓரளவு வேகமாக ஓட்டும்போது பெரிதாக பேலன்சிங் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் 5 கிலோமீட்டர் போன்ற மிகக் குறைவான வேகத்தில் நாம் பைக்கை ஓட்ட நேரும் தருணங்களில் நமது பைக்கை பேலன்சிங் செய்ய வேண்டியது கட்டாயம். இல்லை என்றால் பைக் கீழே விழுந்த நாம் காயமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த பிரச்னையை தீர்ப்பது தான் செல்ஃப்பேலன்சிங் தொழில்நுட்பம். இதை அட்வான்ஸ்டு மோட்டாசைக்கிள் ஸ்டெபிளிட்டி அசிஸ்டென்ட் சிஸ்டம் அதாவது AMSAS என்கிறது யமாஹா மோட்டார்ஸ் நிறுவனம்.
முன்பக்க சஸ்பென்சனுக்கு கீழ் இரண்டு புறமும் இரண்டு மின் மோட்டார்களை பொருத்தி, குறைவான வேகத்தில் பைக் செல்லும் போது பைக்கின் எடை அதிகமாக எந்த பக்கம் சாய்கிறதோ அதற்கேற்றார் போல பைக்கை பேலன்ஸ் செய்து கொள்ளும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்யுடேட்டர்கள் மூலம் ஹேண்டில்பாரையும், முன் சக்கரத்தையும் இணைத்து பேலன்சிங் தொடர்பான தகவல்களை எளிதில் பெற வழி செய்யப்பட்டுள்ளது.
இந்த அக்யுடேட்டர்கள் மூலம் பைக் திரும்பும் போதோ, குறைவான வேகத்தில் செல்லும் போதோ 6ஆக்சிஸ் இனர்ஷியல் மெசர்மென்ட் யுனிட் மூலம் பைக்கை பேலன்சிங் செய்ய முடியும். இப்போதைக்கு இந்த தொழில்நுட்பம் ஆராய்ச்சி அளவில் மட்டும் தான் இருக்கிறது. தற்போது தனது ஆர்-25 ரக பைக்கில் இந்த தொழில் நுட்பத்தைப் பொருத்து சோதனை செய்து பார்த்துள்ளது யமாஹா நிறுவனம். பரிசோதனைகள் வெற்றி பெற்றால் தனது தயாரிப்புகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பொருத்த முடிவு செய்துள்ளது யமாஹா மோட்டார்ஸ் நிறுவனம் .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Yamaha, Yamaha bike