இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதை ஈடு செய்யும் வகையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புது புது மாடல்களில் வாகனங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அதிலும் இரண்டு சக்கர வாகனங்களின் வரவு அமோகம். அந்த வரிசையில் இந்திய சந்தையில் இரணட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள். அந்த புதிய ஸ்கூட்டர்கள் 69 ஆயிரம் விலையில் கிடைக்கின்றன என்பதுதான் ஆனந்த ஆச்சரியம் அளிக்கும் செய்தி. இனி அந்த ஸ்கூட்டர்களின் மாடல், நிறுவனம், வசதிகள என்னெவென்று விபரமாக பார்க்கலாம்.
எலெஸ்கோ நிறுவனம் தான் தற்போது இரண்டு புதிய ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அவற்றுக்கு வி1 மற்றும் வி2 என பெயரிடப்பட்டுள்ளது. எலெஸ்கோ வி1 மற்றும் எலெஸ்கோ வி2 ஆகிய 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும், 2.3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்புவதற்கு 6-7 மணி நேரம் ஆகும். தினசரி வாகன பயன்பாட்டாளர்களுக்கு இந்த ஸ்கூட்டர் மிகவும் பொருந்தும். மாலை, இரவு நேரங்களில் சார்ஜ் போட்டு விட்டால், காலை வழக்கமான பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் 200 கிலோ எடையை இழுக்கும் திறன் கொண்டுள்ளன. அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெற்றுள்ளன.
ப்ளுடூத் கனெக்டிவிட்டி, ஜிபிஎஸ், சைடு ஸ்டாண்டு சென்சார், எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் கீலெஸ் இக்னீஷியன் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். மேற்கண்ட வசதிகள் அனைத்தும் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலுமே வழங்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆரம்ப விலை வெறும் 69,999 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
இந்த 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும், ஆப்பிள் ஐபோன் 14 –ஐ விட குறைவு. ஏனென்றால் ஆப்பிள் ஐபோன் 14 செல்போன் விலை 79,900 ரூபாய். மிகவும் குறைவான விலையில், பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட எலெஸ்கோ வி1 மற்றும் எலெஸ்கோ வி2 ஆகிய 2 புத்தம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எலெஸ்கோ நிறுவனம் நம்புகிறது. மேலும் கம்மியான விலையில் கிடைப்பதால் இந்திய சந்தையில் இருக்கும் மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு எலெஸ்கோ ஸ்கூட்டர்கள் பெரிய போட்டியாளராக மாறவும் வாய்ப்புள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile