முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / தோனி முதல் மஞ்சு வாரியர் வரை.. இந்தியாவில் மின்சார கார்களுக்கு அதிகரிக்கும் வரவேற்பு

தோனி முதல் மஞ்சு வாரியர் வரை.. இந்தியாவில் மின்சார கார்களுக்கு அதிகரிக்கும் வரவேற்பு

இந்தியாவில் அதிகரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள்

இந்தியாவில் அதிகரிக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள்

கடந்த ஜனவரி மாதத்தில் இ கார்களின் விற்பனை 1,61,892 ஆக இருந்தது. அதே மாதத்தில் பெட்ரோல் டீசல் கார்களின் விற்பனை வெறும் 5829 மட்டுமே. கடந்த மார்ச் மாதத்தில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை 1,40,613 ஆக உள்ள நிலையில், பெட்ரோல் டீசல் கார்களின் விற்பனை 9347 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Delhi, India

வாகன விலையில் மானியம், பெட்ரோல் டீசல் கார்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், சாலைவரியில் இருந்து 100 சதவீதம் விலக்கு என ஏராளமான சலுகைகள் இருப்பதால் புதிதாக கார் வாங்குவோர் அனைவரும் எலக்ட்ரிக் கார்களையே விருப்பத் தேர்வாக வைத்திருக்கிறன்றனர்.

எகானமி கார் தயாரிக்கும் நிறுவனங்கள் முதல் சொகுசு கார் தயாரிக்கும் நிறுவனங்கள் வரை அனைத்தும் இ கார்களை தயாரிக்கத் தொடங்கி விட்டதால், சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி வாடிக்கையாளர்கள் வரை எதிரொலிக்கத் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஜனவரி மாதத்தில் இ கார்களின் விற்பனை 1,61,892 ஆக இருந்தது. அதே மாதத்தில் பெட்ரோல் டீசல் கார்களின் விற்பனை வெறும் 5829 மட்டுமே. கடந்த மார்ச் மாதத்தில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை 1,40,613 ஆக உள்ள நிலையில், பெட்ரோல் டீசல் கார்களின் விற்பனை 9347 என்ற எண்ணிக்கையில் உள்ளது.

இதையும் படிக்க : இந்தியாவில் 70 லட்சம் இருசக்கர வாகனங்களைத் தயாரித்து சுசுகி நிறுவனம் சாதனை

ஏராளமான இ கார்கள் பதிவுக்காக காத்திருக்கும் நிலையில், மேலும் கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2020 – 21 காலகட்டத்தில் 11,936 ஆக இருந்த மின்சார கார்களின் எண்ணிக்கை 2022 – 23ல் 62,482 ஆக அதிகரித்துள்ளது.

இ கார்களுக்கு ஆன் ரோட் விலையில் 20,000 முதல் 30,000 ரூபாய் வரை சலுகைகள், மின்சார வாகனங்களுக்கான மானியம், சாலை வரியில் இருந்து 100 சதவீதம் முழுமையான விலக்கு, குறைவான பராமரிப்பு செலவு போன்றவை எலட்ரிக் கார்களை நோக்கி மக்களை அதிகம் செல்ல வைத்திருக்கிறது. மிக முக்கியமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையேற்றம் முழுவதுமாக மக்களை மின்சார கார்களை பக்கம் இழுத்துச் சென்றுள்ளது.

காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில் வாகனங்களின் விற்பனையும் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

அதே நேரம் கடந்த ஆண்டுகளில், மின்சார வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கார் தயாரிக்கும் நிறுவனங்கள் தீயை தடுக்கும் மற்றும் எதிர்கொள்ளும் அளவிலான வசதிகளை கார்களில் சிறப்பு அம்சங்களாக கொண்டு வந்திருப்பதாக அறிவித்த பின்னர் அந்த அச்சமும் விலகியது.

மினி கூப்பர் எலட்க்ரிக் காருடன் நடிகை மஞ்சு வாரியர்

மேலும் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் தற்போது 281 ஆக உள்ள நிலையில், மேலும் இந்தியா முழுவதும் புதிதாக 267 சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வை அதன் விற்பனை அளவே நமக்கு காட்டும் நிலையில், பல்வேறு பிரபலங்களும் தற்போது பெட்ரோல், டீசல் கார்களை விட்டு இ-கார்கள் பக்கம் திரும்பி உள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்கள் இருவரும் போர்ஷேவின் ஸ்போர்ட்ஸ் ரக காரும், நடிகை மஞ்சு வாரியர் மினி கூப்பர் எலட்க்ரிக் காரும் பயன்படுத்துகின்றனர். தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ் பாபு சொகுசு காரான ஆடி – யின் இ-ட்ரான் காரையும், கிரிக்கெட் நட்சத்திரம் தோனி கியா நிறுவனத்தின் இவி6 ரக காரையும் பயன்படுத்துகின்றனர்.

கியா நிறுவனத்தின் இவி6 ரக காருடன் கிரிக்கெட் நட்சத்திரம் தோனி

top videos

    கார்பன் வாயு வெளியேற்ற உமிழ்வை கட்டுப்படுத்த உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வரும் நிலையில், மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிப்பது ஆரோக்கியமான சூழலையே காட்டுகிறது. அதே நேரம் அதற்கான உரிய வசதிகளை ஏற்படுத்தித் தரும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் சவாலான ஒன்றாக உள்ளது.

    First published:

    Tags: Automobile, Electric Cars, Vehicle