முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / கார்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ் நிறுவனம்... எவ்வளவு தெரியுமா?

கார்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ் நிறுவனம்... எவ்வளவு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

முன்னணி கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மே 1 ஆம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்களின் உற்பத்தி செலவு, கார்களுக்கு புதிய ஒழுங்குமுறை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தொடர்ந்து பல கார் நிறுவனங்கள் விலை உயர்வைத் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்த வரிசையில் தற்போது முன்னணி கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மே 1 ஆம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது.

சமீபத்தில், கார்களின் உற்பத்தி செலவுகளை எதிர்கொள்வதற்காக கார் விலையை உயர்த்துவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதோடு விலை உயர்வு ஒருபுறம் அதிகரித்தாலும், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான கார்களை விற்பனை செய்ய முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் படி, வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் கார்களின் விலை 0.6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக கார் மாடலுக்கு ஏற்ப விலை உயர்வு மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வை தொடர்ந்து மூன்றாவது முறையாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 1 மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதி உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகனங்களின் விலையை 5% வரை உயர்த்துவதாக அறிவித்தது. டாடா மோட்டார்ஸின் முக்கிய கார் மாடல்களான டியாகோ, டிகோர், புனாச், ஹாரியர், நெக்ஸான் மற்றும் சஃபாரி ஆகியவை மே 1 முதல் விலை உயர்ந்துள்ளது. இதன் படி, பயணிகள் வாகனங்களின் விலை ரூபாய் 5.54 லட்சம் முதல் ரூபாய் 25 லட்சம் வரை உயரக்கூடும்.

டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள மற்ற புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயணிகள் வாகனங்களின் விலையை அதிகரித்துள்ளன. மேலும் மாருதியில் இருந்து ஹூண்டாய் முதல் ஹோண்டா வரை, கார் தயாரிப்பாளர்கள் தங்கள் கார்களின் விலைகளை வேரியண்ட்டைப் பொறுத்து ரூபாய் 2,000 முதல் ரூபாய் 15,000 வரை உயர்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு

டாடா மோட்டார்ஸ் மட்டுமல்லாமல் மாருதி சுசுகி (Maruti Suzuki), ஹுண்டாய் (Hyundai), ஹோண்டா (Honda) ஆகிய முன்னணி கார் நிறுவனங்களும் கார் விலையை உயர்த்த முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : கார் டயர் ரொம்ப வருஷம் உழைக்கணுமா? அப்படினா இதை பண்ணுங்க!

top videos

    குறிப்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வந்த BS6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு மாறியதன் விளைவாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் E20 எரிபொருள்-தயார் இணக்கமான மாடல்களை வெளியிட வேலை செய்து வருகின்றனர். இதன் விளைவாக கார்களின் விலைகள் அதிகரிக்கின்றன. வாகன உற்பத்தியாளர் அதன் உள் எரிப்பு இயந்திரம் (ICE) பயணிகள் வாகனங்களின் போர்ட்ஃபோலியோ முழுவதும் சராசரியாக 1.2% விலையை அதிகரித்துள்ளது.

    First published:

    Tags: Automobile, TATA, Tata motors