ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனம் சுசுகி. இந்த நிறுவனம் இந்தியாவில் கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக பல்வேறு மாடல்களில் இரு சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ஸ்கூட்டர், பைக், பிக் பைக்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் மாடல் என அனைத்து ரகங்களிலும் பைக்குகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக சுசுகி நிறுவனம் திகழ்கிறது. இந்நிலையில் சுசுகி நிறுவனம் தனது 70 லட்சமாவது பைக்கை தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளது. சேம்பியன் யெல்லோ நிற வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸே விற்பனைக்காக தற்போது சந்தைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள 70 லட்சமாவது பைக்காகும்.
தற்போதைய நிலவரப்படி சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று விதமான பிரிவுகளில் தன்னுடைய டூ-வீலர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மோட்டார்சைக்கிள்ஸ், பிக் பைக்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் ஆகியவையே அவை. இதில், முதலாவது பிரிவான மோட்டார் சைக்கிள்ஸ் பிரிவில் வி-ஸ்ட்ராம் எஸ்எக்ஸ், ஜிக்ஸெர் எஸ்எஃப் 250, ஜிக்ஸெர் 250, ஜிக்ஸெர் எஸ்எஃப் மற்றும் ஜிக்ஸெர் ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களை சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதேபோல், பிக் பைக்ஸ் பிரிவில் வி-ஸ்ட்ராம் 650 எக்ஸ்டி, கடானா மற்றும் ஹயபுசா ஆகிய பைக்குகளை தயாரித்து வருகிறது. ஸ்கூட்டர் பிரிவில் அவெனிஸ், அக்செஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ் ஆகிய மாடல்களை சுசுகி இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றில், இந்திய சந்தையில் ஜிக்ஸெர் வரிசையில் உள்ள அனைத்து பைக் மாடல்களுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
Also Read : உலகின் முதல் ரோலிங் கார் டிஸ்பிளே...! ஹூண்டாயின் அசத்தல் கண்டுபிடிப்பு..
ஸ்கூட்டரில் அக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஆகிய மாடல்களுக்கு இந்திய சந்தையில் எப்போதுமே டிமாண்டுதான். இவற்றிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரவேற்பே சுசுகி மோட்டார் சைக்கிளை 7 மில்லியனாவது யூனிட்டை தயாரிக்கும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றது.
இந்தியாவில் சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தும் விதமாகச் சென்ற நிதியாண்டில் மட்டும் 9.38 லட்சம் புதிய சுசுகி டூ-வீலர்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது 2021-22 ஆம் நிதியாண்டைக் காட்டிலும் 24.3 சதவீதம் அதிக விற்பனையாகும். இனி வரும் காலங்களிலும் சுசுகி நிறுவனம் இது போலப் பல சாதனைகளைப் படைக்க உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Bike