இந்தியாவில் தற்போது ஒவ்வொரு மாதமும் பல லட்சம் இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதனால் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது புதிய மாடல்களை சளைக்காமல் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க தங்கள் தயாரிப்புகளில் பல்வேறு புதுமைகளையும் வசதிகளையும் புகுத்தி அசத்தலான வாகனங்களை அறிமுகம் செய்வதில் முனைப்புக் காட்டி வருகிறார்கள்.
அப்படி வரும் ஏப்ரல் மாதமும் சில புதிய இரு சக்கர வாகனங்கள் சந்தைக்கு வர உள்ளன. அதில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இரு சக்கர வாகனங்கள் பற்றி இப்போது பார்க்கலாம். நாட்டில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஒன்று.
இந்த மின்சார ஸ்கூட்டர் ஒரு முழு சார்ஜில் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த திறனுக்காகவே இந்த வாகனத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்போரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இது வரும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வர உள்ளது.
இதோ வரும் , அதோ வரும் எனக் காலம் கடத்தப்பட்டு வந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துவிடும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் பணியில் மிகத் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் புதிய மின் வாகன உற்பத்தி ஆலையை அமைப்பதிலும் அந்த நிறுவனம் மிகத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.
இந்தியர்களின் எதிர்பார்ப்பைப் பெரிதும் தூண்டி வரும் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று தான் ஹோண்டா ஆக்டிவா 125-ஹெச் ஸ்மார்ட். ஹோண்டா நிறுவனம் கார்களில் காணப்படும் சில முக்கிய வசதிகளை இந்த டூ-வீலரில் வழங்கி இருக்கின்றது. குறிப்பாக ரிமோட் சாவி வசதி இந்த ஸ்கூட்டரில் உள்ளது. இந்த சாவியை வைத்து ஸ்கூட்டரை லாக்/அன்-லாக் செய்து கொள்ள முடியும்.
Also Read : புதிதாக சந்தையில் களமிறங்கும் ஹோண்டா ஆக்டிவா 125 H.. இதில் என்ன ஸ்பெஷல் ?
இதுதவிர, எஞ்சின் ஆன்/ஆப்பிற்கும் இதே ரிமோட் சாவி தான். கிட்டத்தட்ட லேட்டஸ்ட் காரைப் போல. இத்தகைய அம்சத்தைப் பெறும் முதல் டூ-வீலர் ஹோண்டா ஆக்டிவா தான். இதனாலேயே இந்த வாகனத்தை எதிர்பார்ப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதவிர, அதிக மைலேஜ் தரும் வாகனமாகவும் இதனை ஹோண்டா தயார் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்மார்ட் ஆக்டிவா ஏப்ரலில் சந்தையில் களமிறங்கிக் கலக்க உள்ளது. இதே போல் 2023 டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர் மற்றும் ஆர்எஸ் பைக்கும், டுகாட்டி மான்ஸ்டர் எஸ்பி பைக்கும் வரும் ஏப்ரலில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike, Electric bike, Honda