மத்திய அரசு அறிவித்தபடி மின்சார வாகனங்கள் வாங்கினால் 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறுவதற்கு வரும் மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி தேதியாக உள்ளது. இத்திட்டம் குறித்த முழு விவரங்கள் கீழ் வருமாறு :-
மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு வருமான வரியிலிருந்து பிரிவு 80EEB பிரிவின் கீழ் ரூ1.5 லட்சம் வரையிலான பணத்திற்கு வரி விலக்கை அறிவித்திருந்தது.
மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்காக வருமான வரி விலக்கில் ஒரு பிரிவையே உருவாக்கியது. இந்த பிரிவின் கீழ் வரிவிலக்கைப் பயன்படுத்தக் கடைசி காலகட்டம் மார்ச் மாதம் 31ம் தேதியாக உள்ளது. இந்த சலுகை மூலம் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியிலிருந்து விலக்கு பெற முடியும்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்தாலும் சரி, காராக இருந்தாலும் சரி இந்த வருமான வரி விலக்கு கிடைக்கும். ஆனால் இந்த விலக்கைப் பெற இந்த வாகனத்தைத் தனி நபரின் பெயரில்தான் வாங்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் பெயரிலோ, அல்லது இந்து கூட்டுக் குடும்பத்தின் பெயரிலும் அல்லது வேறு வகையிலோ வாங்க முடியாது. இந்த ரூ.1.5 லட்சத்திற்கான வருமான வரி விலக்கு என்பது கடன் மூலம் வாகனத்தை வாங்குபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவர்கள் கடனை திரும்பச் செலுத்துவதில் ரூ1.5 லட்சம் மதிப்பிலான வட்டிக்கான வரியை மட்டுமே குறைத்துக்கொள்ள முடியும்.
Also Read : இனி ரெஜிஸ்ட்ரேஷன் செய்யாத புதிய வாகனங்களை சாலையில் இயக்க முடியாது..
மேலும் இந்த சலுகை பழைய வரி விதிப்பு முறையின் கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் தான் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் இருப்பவர்களுக்கு கிடையாது.
எனவே மின்சார காரோ, இரு சக்கர வாகனமோ வாங்கும் எண்ணம் இருந்தால் இந்த நிதியாண்டின் கடைசி நாளான வரும் 31 ஆம் தேதிக்குள் வாங்கினால் நாம் வாங்கும் வாகனத்திற்கு ஏற்றார் போல் கணிசமான அளவு பணத்தைச் சேமிக்க முடியும்.
மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இது போன்ற பல்வேறு சலுகைகளை மத்திய அரசும் பல மாநில அரசுகளும் வழங்கி வருகின்றன. அதே போல் மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தியாளர்களுக்கும் மத்திய மாநில அரசுகள் பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike, Electric Cars