உலகம் முழுவதும் கிளைப் பரப்பி அனைத்து நாட்டு மக்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கேற்ப ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஜப்பான் நாட்டு நிறுவனமான ஹோண்டா பிராண்டுகள் உலகம் முழுவதுமே மிகவும் பிரசித்தம். சொகுசு, பாதுகாப்பு, ஸ்டைல் என அத்தனை அம்சங்களிலும் ஹோண்டா நிறுவனம் தங்களது கார்களில் வழங்கி வருகிறது. ஹோண்டா நிறுவனம் அண்மையில் தயாரித்து விற்பனை செய்த கார்களில் பாதுகாப்பு அம்சமான சீட் பெல்ட் போடுவதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோளாறை சரிசெய்வதற்காக ஐந்து லட்சம் கார்களை திரும்ப அழைத்துள்ளது.
இந்த ரீகால் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட கார்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நாடுகளுக்கு இது பொருந்ததாது. சிலர் இந்த அழைப்பு இந்தியாவிற்கும் அடங்கும் என அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். இந்தியர்கள் இதை எண்ணிக் கவலை அடைய தேவையில்லை. ஒருவேளை நீங்கள் அமெரிக்கா அல்லது கனடாவில் வசித்துக் கொண்டிருக்கும் ஹோண்டா கார் பயன்பாட்டாளர்கள் என்றால் இந்த அழைப்பு உங்களுக்கு பொருந்தும்.
அதுவும், அந்த வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட வாகன மாடல்களுக்கு மட்டுமே அழைப்பு பொருந்தும். 2017 முதல் 2020 வரையில் தயாரிக்கப்பட்ட சிஆர்-வி, 2018 முதல் 2019 வரை தயாரிக்கப்பட்ட அக்கார்ட், 2018 முதல் 2020 வரையில் தயாரிக்கப்பட்ட கடைசி மற்றும் 2019 இல் தயாரிக்கப்பட்ட இன்சைட் ஆகிய மாடல்களுக்கே அவசர அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர அக்யூரா ஆர்டிஎக்ஸ் 2019 மற்றும் 2020களில் தயாரிக்கப்பட்டவற்றிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் உயிர் காக்கும் கருவியான சீட் பெல்டில் பிரச்னை ஏற்பட்டு இருக்கின்றது. சீட் பெல்டில் வழங்கப்பட்டிருக்கும் கொக்கிகள், அதற்கான துளையில் பொருந்துவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது.
Also Read : அட்டகாசமான வசதிகளுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ஹோண்டா ஷைன்..!
இதனைச் சரி செய்யவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. சீட் பெல்ட் கொக்கிகள் சரியாகப் பொருந்தவில்லை என்பது, மிகப் பெரிய அபாயம். எனவேதான் இந்த விஷயத்தில் மிகத் தீவிரமாக ஹோண்டா நிறுவனம் களமிறங்கியுள்ளது. செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக இந்த அழைப்பை ஹோண்டா விடுக்க உள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சீட் பெல்ட் கொக்கிகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய கொக்கிகள் சேர்க்கப்பட இருக்கின்றன. இந்த வகையில் மேலே குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட மாடலைச் சேர்ந்த சுமார் ஐந்து லட்சம் கார்களுக்கு ஹோண்டா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.