முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / சூப்பர் லுக்.. நச் சிறப்பம்சங்கள்.. இந்தியாவில் களம் இறங்கும் ராயல் என்ஃபீல்டு புது மாடல் பைக்குகள்!

சூப்பர் லுக்.. நச் சிறப்பம்சங்கள்.. இந்தியாவில் களம் இறங்கும் ராயல் என்ஃபீல்டு புது மாடல் பைக்குகள்!

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு புதிய மாடல் பைக்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய பைக் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 என இரு பைக் மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பைக் ஓட்டுவதையே மிகவும் சுவாரஸ்யமாக்கிய பைக் என்றால் அது ராயல் என்ஃபீல்ட் பைக் தான். கம்பீரத்தின் அடையாளமாக அன்று முதல் இன்று வரை பார்க்கப்படுவது ராயல் என்ஃபீல்ட்டின் புல்லட் பைக்.

அந்த புல்லட் பைக்கை தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப, ஸ்டைல் அன்ட் லுக்கில் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப அம்சங்களுடன் அப்டேட் செய்து கொண்டே வருகிறது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். அதன் தொடர்ச்சியாகத் தான் இப்போது புத்தம் புதிய இரண்டு மாடல்களை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் 650சிசி என்ஜின் கொண்ட சூப்பர் மீட்டியோர் 650 பைக் விற்பனையில் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில், புதிய 650 ட்வின்ஸ் பைக்குகளின் என்ஜின் ஆப்ஷனில் மாற்றம் இல்லாமல் 648சிசி என்ஜின் பொருத்தப்பட்ட பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 47 Hp குதிரை திறனை வெளிப்படுத்தும் இந்த எஞ்சின். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. புதிய ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 பைக்கில் முந்தைய ஹெட்லைட்டிற்கு பதிலாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் உள்ள எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது.

கூடுதலாக வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், டியூப்லெஸ் டயர்கள் கொண்ட கருப்பு அலாய் வீல்கள், USB சார்ஜர் மற்றும் சுவிட்ச் கியர் மற்ற புதிய RE மாடல்களில் இருப்பதைப் போலவே இந்த பைக்குகளிலும் உள்ளன. வழக்கமாகக் கிடைக்கும் வண்ணங்களோடு கூடுதலாக பிளாக் ரே மற்றும் பார்சிலோனா ப்ளூ நிறங்களைப் பெற்று மொத்தம் 7 நிறங்களில் கிடைக்கின்றன.

Also Read : மார்ச் 2023-ல் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கும் 7 சிறந்த எஸ்யூவி-க்களின் பட்டியல்..!

கான்டினென்டினல் ஜிடி 650 பைக்கும் இன்டர்செப்டார் போல அலாய் வீல் பெற்றுக் கூடுதலாக எல்இடி ஹெட்லைட், புதிய சுவிட்ச் கியர் உள்ளிட்ட அம்சங்களுடன் ஸ்லிப்ஸ்ட்ரீம் ப்ளூ மற்றும் அபெக்ஸ் கிரே என இரு கூடுதல் நிறங்களுடன் வெளியாகியிருக்கிறது. 2023 RE இன்டர்செப்டர் 650 பைக் 3.03 லட்சம் ரூபாய்க்கும், கான்டினென்டல் GT 650 3.19 லட்சம் ரூபாய்க்கும் கிடைக்கும். இந்த விலைகள் எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இரண்டு மாடல்களும் வழக்கம் போலச் சக்கை போடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மாடல்களுக்குமான முன்பதிவு தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் இந்த புதிய வேரியண்ட் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளை பலரும் ஆர்வத்துடன் புக்கிங் செய்து வருகிறார்கள்.

First published:

Tags: Bike, Royal enfield