முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / பைக் விரும்பிகளுக்கு சூப்பர் நியூஸ்... விரைவில் வெளிவருகிறது ராயல் என்ஃபீல்டு இ-பைக்

பைக் விரும்பிகளுக்கு சூப்பர் நியூஸ்... விரைவில் வெளிவருகிறது ராயல் என்ஃபீல்டு இ-பைக்

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது எலெக்டரிக் பைக்கை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வாகனப் போக்குவரத்து தற்போது முற்றிலும் மின் மயமாகி வருகிறது. சாதாரண இரு சக்கர வாகனங்கள் தொடங்கி கனரக டிரக்குகள் வரை மின்சாரத்தில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வரும் காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காண்பதே அரிதாகிவிடும் போல இருக்கிறது. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள ஆட்டேமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தத் துவங்கிவிட்டனர்.

இந்தியாவிலும் பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் களம் இறங்கிவிட்டனர். அந்த வரிசையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் இணைந்துள்ளது. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒரு எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வருகிறது. ஸ்பானீஷ் நாட்டைச் சேர்ந்த ஸ்டார்க் மோட்டார்சைக்கிள் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை தயாரித்து வருகிறது ராயல் என்ஃபீல்டு.

இந்த பைக்கிற்கு L1A என்ற கோட் பெயரை வைத்துள்ளது. இந்த எல்1ஏ பைக்கை இந்தியாவில் தயாரித்து சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த ராயல் என்ஃபீல்டின் முதல் எலெக்ட்ரிக் பைக் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் முதல் புரோட்டோடைப் இந்தாண்டு இறுதியில் மக்கள் முன் காட்சிக்கு வரும் என்றும், அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த பைக் விற்பனைக்கே வந்துவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read : ஒரு முழு சார்ஜில் 300 கிமீ தூரம்.. அசத்தலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ராயல் என்ஃபீல்டு தயாரிக்கும் முதல் எலெக்ட்ரிக் பைக்கான L1A என்ற பைக் அதிக ஃபெர்பாமென்ஸ் கொண்ட பைக்காக இருக்காது. ஆனால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கே உள்ள பிரத்தியேக குணமான பிரீமியம் மற்றும் கெத்தான ரக பைக்காக இருக்கும் எனத் தெரிகிறது. அது நேரம் இந்த பைக் ஆஃப் ரோடிங் பெர்ஃபாமென்ஸ் கொண்ட பைக்காக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பைத் தமிழகத்தில் செய்யவே திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே நடத்தி வரும் வல்லம் வடங்கல் தொழிற்சாலையிலேயே இது தயாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்யாறு பகுதியில் இந்நிறுவனம் 60 ஏக்கர் நிலப் பரப்பில் புதிய தொழிற்சாலை அமைக்கவுள்ளது. அந்த தொழிற்சாலை 2025 ஆம் ஆண்டு தயாராகும் என எதிர்பார்க்கலாம்.

First published:

Tags: Automobile, Electric bike, Royal enfield