முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ஆல்-நியூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுக செய்ய உள்ள Odysse  நிறுவனம்!

ஆல்-நியூ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுக செய்ய உள்ள Odysse  நிறுவனம்!

ஓடிசீ மின்சார வாகனம்

ஓடிசீ மின்சார வாகனம்

இந்தியாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன நிறுவனமான Odysse Electric Vehicles, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் தயாரிப்புகளை வழங்கும் ஒரு பகுதியாக அதன் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 2020-ல் தனது பயணத்தைத் தொடங்கிய Odysse நிறுவனம், அதன் போர்ட்ஃபோலியோ மற்றும் வரம்பை தொடர்ந்து விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. Odysse நிறுவனம் அதன் தற்போதைய உற்பத்தி திறனை மேம்படுத்த இரண்டாவது ஷிப்ட்டை சேர்த்துள்ளது. இதன் மூலம் ஒரு ஷிப்டுக்கு மாதம் ஒன்றுக்கு 2500 யூனிட்கள் என்ற அளவில் இருந்து 5000 யூனிட்கள் என உற்பத்தி திறனை இரட்டிப்பாக்குகிறது. எனினும் நிறுவனம் தற்போது அதன் திறனில் 50%  மட்டுமே இயங்குகிறது.

ஆனால் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்நிறுவனம் அதன் முழு திறனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்பத்தி அதிகரிப்போடு 2023-ஆம் ஆண்டின் இறுதியில் Odysse நிறுவனம் அதன் வாகன பயன்பாடு இரட்டிப்பாகும் என நம்புகிறது. Odysse Electric Vehicles நிறுவனம் அதன் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதுடன், தனது தயாரிப்பு போர்ட்ஃபோலியோவில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்களையும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் Fame-II பாலிசி அங்கீகரிக்கப்பட்ட ஹை-ஸ்பீட் பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் (Q3 - ஜூலை முதல் செப்டம்பர்) புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளது. தவிர இந்த பிராண்டின் தற்போதைய தயாரிப்புகளின் போர்ட்ஃபோலியோவும் லேட்டஸ்ட் அம்சங்கள் உள்ளிட்ட பல அப்கிரேட்களை பெறுகிறது. புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்கனவே இருக்கும் தயாரிப்புகளில் அப்கிரேட் செய்யப்படும் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் மற்றும் தங்களது தயாரிப்புகளை தேர்ந்தெடுப்பது சரியான முடிவு என மக்களை உணர வைக்கும் என நிறுவனம் நம்புகிறது.

தவிர Odysse நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அணுகலை மேம்படுத்த அதன் டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிறுவனம் தற்போது மேற்கு மற்றும் தென்னிந்தியா முழுவதும் சுமார் 68 டீலர்ஷிப்களை கொண்டுள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் நிறுவனம் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளை தவிர நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தனது இருப்பை விரிவுபடுத்த தீவிரம் காட்டும் என தெரிகிறது. மேலும் 2023 இறுதிக்குள் 150+ டீலர்ஷிப்களை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Also Read : எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? மானியம் மற்றும் பிற விவரங்கள் இதோ!

இது தொடர்பாக பேசிய நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர், எங்களது Odysse நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்குவதோடு, புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை வழங்க எங்களது டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், எங்களது இந்த முன்முயற்சிகள் நிறுவனத்தின் வளர்ச்சி மூலோபாயத்தின் ஒரு பகுதியாகு. இவை நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைய பெரும் பங்கு வகிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

First published:

Tags: Automobile, Electric bike