முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / இனி ரெஜிஸ்ட்ரேஷன் செய்யாத புதிய வாகனங்களை சாலையில் இயக்க முடியாது..

இனி ரெஜிஸ்ட்ரேஷன் செய்யாத புதிய வாகனங்களை சாலையில் இயக்க முடியாது..

மாதிரி படம்

மாதிரி படம்

Automobile News | இனி நீங்கள் புதிய கார் அல்லது பைக் வாங்கவிருக்கிறீர்கள் என்றால் மத்திய அரசு புதிதாக அமல்படுத்தியுள்ள விதியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்பெல்லாம் நல்ல நாள் பார்த்து ஷோரூம் சென்று, நம் மனதுக்கு பிடித்தமான மாடலில் வாகனத்தை வாங்கி ரெஜிஸ்ட்ரேஷன் செய்து நம்பர் பிளேட் வரவில்லை என்றாலும் கூட, புதிய வாகனத்தில் ஆசை தீர நகர்வலம் வருகின்ற பழக்கம் இருந்தது. சாவகாசமாக கொஞ்ச நாட்கள் கழித்து ரிஜிஸ்டிரேஷனுக்கு பிறகு நம்பர் பிளேட் மாட்டிக் கொள்வார்கள்.

ஆனால், இனி நீங்கள் புதிய கார் அல்லது பைக் வாங்கவிருக்கிறீர்கள் என்றால் மத்திய அரசு புதிதாக அமல்படுத்தியுள்ள விதியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் முன்பாகவே வாகனங்களை பதிவு செய்திருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வாகனத்தை சாலையில் இயக்குவதற்கு முன்பாக நம்பர் பிளேட் ஒட்டியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :  மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே.. புதுச்சேரியில் இனிமையான குரலில் பாடி அசத்தும் திருநங்கை கோபிகா..

கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதியே இந்த விதி அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது என்றாலும், தற்போது அதை கடுமையாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக, கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரி பீமா கௌடா பாட்டில் இந்த விதிமுறையை கடுமையான முறையில் அமல்படுத்தி வருகின்றார் என்று அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதிய வாகனங்கள்

இதுகுறித்து பீமா கௌடா கூறுகையில், “புதிய விதிமுறைகளின்படி வாடிக்கையாளர்கள் வாகனத்தை பதிவு செய்திருந்தாலும் கூட நம்பர் பிளேட் இல்லாமல் அதை வீட்டுக்கு எடுத்து செல்ல இயலாது’’ என்று கூறியுள்ளார்.

ஆன்லைனில் பெறலாம்

நம்பர் பிளேட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு முன்பாக மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும் என்ற கவலையும் இனி கிடையாது. இதற்காக எந்தவொரு அரசு அலுவலகத்திற்கும் இனி நீங்கள் அலைய வேண்டாம். உட்கார்ந்த இடத்தில் இனி ஆன்லைனிலேயே விண்ணப்பம் செய்து நம்பர் பிளேட் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க :  ஊட்டியில் மயில்களை பார்த்து இருக்கீங்களா? ஆச்சரியத்தில் உள்ளூர் மக்கள்!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம்

தற்போதைய சூழலில் பொது போக்குவரத்து விதிமீறலுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்படுகிறது. வாகனத்தை அதிவேகமாக இயக்கினால் ரூ.1,000, சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ரூ.1,000, ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூ.2,000 மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம், அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ரூ.1,000, செல்ஃபோன் பேசியபடி வாகனம் இயக்கினால் ரூ.1,000 முதல் ரூ.2,000 என்ற அளவில் அபராதம் விதிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினால் ரூ.5 ஆயிரம் என்ற அளவிலும், மது அருந்திவிட்டு வாகனம் இயக்கினால் ரூ.10,000 என்ற அளவிலும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், வாகனப்பதிவு ரத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

    First published:

    Tags: Automobile, India