முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்குகிறது சுசுகி பலேனோ கார்...

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் களமிறங்குகிறது சுசுகி பலேனோ கார்...

மாருதி பலேனோ

மாருதி பலேனோ

மாருதி சுசுகியின் பலேனோ காரில் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாருதி சுசுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் பலேனோவும் ஒன்று. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக கார். இந்த கார் மாடலில் மாருதி சுசுகி நிறுவனம் மும்முனை சீட் பெல்ட் அம்சத்தை சேர்த்துள்ளது. 

பலேனோ கார் வரலாற்றில் மும்முனை சீட் பெல்ட் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பலேனோ வரலாற்றில் மட்டும் இல்லை ஹேட்ச்பேக் கார் வரலாற்றிலும் மும்முனை சீட் பெல்ட் இதுவே முதல் முறையாகும். மாருதி சுசுகி நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் ஹேட்ச்பேக் ரக காராக பலேனோ இருக்கின்றது. இந்த காரில் மும்முனை சீட் பெல்ட் வசதியை மாருதி சுசுகி அறிமுகம் செய்திருப்பதால் அதன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பயணத்தின்போது பாதுகாப்பை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது சீட் பெல்ட். மார்பகம், இடுப்பு மற்றும் தோள்பட்டை ஆகியவற்றிற்கு அதீத பாதுகாப்பை வழங்கக் கூடியதாக இந்த மும்முனை சீட் பெல்ட் இருக்கின்றது. இந்த அம்சத்தையே நிறுவனம் எந்தவொரு விலை உயர்வையும் செய்யாமல் வழங்கி இருக்கின்றது.

மும்முனை சீட் பெல்ட் மட்டுமின்றி அட்ஜெஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் பின்னிருக்கைக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சமும் இந்த காரில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மாருதி சுசுகி வழங்கி இருக்கும் இந்த அம்சங்கள் விரைவில் டொயோட்டா கிளான்ஸா காரிலும் இடம் பெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் வாகன பாதுகாப்பு விதிகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே தன்னுடைய காரை அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்டதாகவும், பிரீமியம் தரம் கொண்டதாகவும் மாருதி சுசுகி மாற்றி இருக்கின்றது. பலேனோ காரில் ஏற்கனவே பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. 360 டிகிரி கேமிரா, ஹில் ஹோல்டு அம்சத்துடன் கூடிய இஎஸ்பி, டிரைவர் மற்றும் கோ-டிரைவர்களுக்கான ஏர் பேக்குகள், சைடு மற்றும் கர்டைன் ரக ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்களை மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது.

Also Read : சாதனை படைத்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம்.. ஏப்ரல் மாதம் எகிறிய விற்பனை!

அதுதவிர, ரியர் வியூ கேமிரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்டு சிஸ்டம், சீட் பெல்டு ரிமைண்டர், பிரேக் அசிஸ்ட், சீட் பெல்ட் ப்ரீ டென்சனர், ஃபோர்ஸ் லிமிடர் மற்றும் குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் என பல்வேறு அம்சங்கள் பலேனோவில் வழங்கப்படுகின்றன. இந்த பாதுகாப்பு அம்சங்களுடனேயே புதிதாக மும்முனை இருக்கை பெல்டை மாருதி சுஸுகி பலேனோவில் சேர்த்து இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 6.61 லட்சம் தொடங்கி ரூ. 9.88 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.

First published:

Tags: Maruti, Maruti Suzuki