இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் பல வகையான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதில் முக்கியமான வேரியண்ட் என்றால் அது தார் ஆகத்தான் இருக்கும். ஏற்கனவே மூன்று கதவுகளைக் கொண்ட தார் கார் இந்திய சந்தையில் சக்கை போடு போட்டு வருகிறது. அதை மேம்படுத்தி 5 கதவுகள் கொண்ட காராக வெளியிடப்படும் என ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன்படி புதிய அசத்தலான அம்சங்களுடன் இப்போது 5 கதவுகள் கொண்ட தார் தயாராகிவிட்டது. விரைவில் சந்தையில் அறிமுகமாக உள்ளது. அந்த புதிய தாரின் டிசைன், சிறப்பம்சங்கள் என எத்தனையோ விபரங்கள் அனுமானமாக கூறப்பட்டாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை. அதனாலேயே தார் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.
இந்நிலையில் புதிய தார் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளிவரவிருக்கும் புதிய தார் சன்ரூஃப் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிகிறது. இதற்கு முன்பு எத்தனையோ முறை புதிய தார் காரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதே வரிசையில் தற்போதும் முற்றிலும் மூடப்பட்ட தார் சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆனால் இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபோர் வீல் டிரைவ் காரான தார் வெளித் தோற்றத்தில் பழைய காரை விட பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் இருந்தாலும் மேம்பட்ட பல வசதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. பெரிய அளவிலான சன்ருஃப், நிலையாக பொருத்தப்பட்ட பின்புற கண்ணாடி, பின்னிருக்கைக்கு ஸ்பிளிட் விண்டோ, முன்புற இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட், பின்புறத்தில் மல்டிபிள் சீட்டிங் ஆப்சன், எல்இடி டெயில் லேம்ப் மற்றும் அலாய் வீல்கள் என அசத்தலாக தயாராகி வருகிறது புதிய தார்.
கேபினிலும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டிருப்பதாக கசிந்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. பழைய தாரில் இல்லாத ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் புதிய தாரில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அனைத்து கார் கணெக்ட்விடிகளுடன் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதோடு உள்புற டிசைனும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நெக்ஸ்ட் ஜென் தார், இந்த ஆண்டு விற்பனைக்கு கிடைக்காது என்றும், அடுத்த ஆண்டு உறுதியாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் ஊடகங்களிடம் கூறியுள்ளார் மஹிந்திரா நிறுவனத்தின் செயல்தலைவர் மற்றும் சிஇஓ ராஜேஸ் ஜெஜூரிகர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Mahindra