கவாஸகி நிறுவனம் தனது கிளாசிக் டைப் பைக்குகளின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தனது டபிள்யூ 175 பைக்கின் விலையில் தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது.
இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக கிளாசிக் ரக இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் கவாஸாகியும் ஒன்று. இந்த நிறுவனம் தன்னுடைய கிளாசிக் ரக பைக் மாடலின் பக்கம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ஓர் பிரத்யேக சலுகையை அறிவித்துள்ளது.
அதாவது அந்த பைக்கின் விலையில் பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி வவுச்சர் வழங்கியுள்ளது. அந்த சலுகையின் காலம் ஏப்ரல் 30 வரை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சலுகையின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட் இந்த சலுகையின் காரணமாக கவாஸாகி டபிள்யூ 175 பைக்கின் விற்பனை கனிசமான அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இன்னும் பலமடங்கு விற்பனையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக கவாஸாகி நிறுவனம் மே மாதம் 31 ஆம் தேதி வரை சலுகையை நீட்டிப்பு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், கவாஸாகி டபிள்யூ 175 பைக்கை 31 மே வரையில் ரூ. 10 ஆயிரம் குறைவான விலையில் வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும்.
கவாஸாகி டபிள்யூ 175 பைக் இந்திய சந்தையில் இரு வெவ்வேறு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்பெஷல் ஆகியவையே அவை ஆகும். ஸ்டாண்டர்டு வெர்ஷனுக்கு ரூ. 1.47 லட்சமும், ஸ்பெஷல் வெர்ஷனுக்கு ரூ. 1.49 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த இரு தேர்வுகளும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350க்கு போட்டி அளிக்கும் வகையில் விற்பனையில் உள்ளன.
கவாஸாகி டபிள்யூ 175 மாடலில் 177 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 7,500 ஆர்பிஎம்மில் 12.8 பிஎச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 13.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இந்த பைக்கில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த அளவு குறைவான திறனை இந்த மோட்டார்சைக்கிள் வெளியேற்றினாலும் உருவம் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றின் அடிப்படையில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் மோட்டார்சைக்கிள்களுக்கு டபிள்யூ 175 போட்டியாக இருக்கின்றது.
ஹண்டர் 350-ஐ விட திறன் குறைவான எஞ்சினாக இருந்தாலும் அதன் ஸ்டைல், வடிவமைப்பு மற்றும் விலை காரணமாக ஹண்டருக்கு போட்டியாக பார்க்கப்படுகிறது கவாசகி டபிள்யூ 175
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike