மின்சார வாகன மைலேஜ் விஷயத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறிது அதிருப்தி காணப்படுகிறது. ஆனால் அவற்றை சரியான முறையில் பராமரித்தால் மைலேஜை கணிசமான அளவு அதிகரிக்க முடியும் என்று எலக்ட்ரிக் பைக் துறை வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எதிர்காலத்தில் வாகனத் துறையில் எலக்ட்ரிக் வாகனங்களின் உபயோகம் பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல் விலையில் இருந்து தப்பிக்க நிறைய வாகன ஓட்டிகள் மின்சார வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பெட்ரோல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஓரளவு குறைந்த விலையில் இருப்பதும் ஒரு காரணம். எனினும், மின்சார வாகனங்களில் மைலேஜ் விஷயத்தில் சிறிதுஅதிருப்தி காணப்படுகிறது.
மிதமான வேகம்
சிலர் அதிவேகத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை ஓட்டுவார்கள். இப்படி செய்தால் சார்ஜ் விரைவாக குறைந்து அதனால் மைலேஜும் பாதிக்கப்படும். ஒவ்வொரு வாகனங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள எகானமிக் ரேஞ்சில் வாகனங்களை ஓட்டினால் அதிக மைலேஜ்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
சடன் பிரேக்குகள் போடக்கூடாது
ஸ்கூட்டரை நிதானமாக நிறுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அடிக்கடி சடன் ப்ரேக்குகளை போடுவதால் பைக்கின் பர்ஃபார்மென்ஸ் பாதிக்க கூடும்.
குறைந்த எடை
எலக்ட்ரிக் வாகனங்களில் அதிகமான எடையை எடுத்துச் செல்வதும் மைலேஜ் குறைவதற்கு முக்கிய காரணம். முடிந்த வரை குறைவான எடையுடன் பயணிக்க முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் மைலேஜை அதிகரிக்கலாம்.
டையர்களில் காற்று
குறைவான காற்று டையர்களில் இருக்கும்போது வண்டி அதிகான பாரத்தை சுமக்கும். இதனால் பர்பார்மென்ஸ் குறைந்து மைலேஜும் பாதிக்கப்படும். ஒவ்வொரு வண்டிக்கும் தீர்மானிக்கப்பட்ட அளவு காற்றை டையர்களில் நிரப்பி பயணிக்க வேண்டும்.
இந்த அம்சம் இருந்தால் பெட்டர்
சில எலக்ட்ரிக் வாகனங்களில் ரீஜனரேடிவ் பிரேக்கிங் சிஸ்டம் அம்சம் உள்ளது. நிறுத்தத்தின் போது மெக்கானிக்கல் எனர்ஜி, எலக்ட்ரிக்கல் எனர்ஜியாக மாறி பேட்டரியை சார்ஜ் செய்கிறது. இந்த அம்சம் உள்ள வாகனங்களில் ரேஞ்சின் அளவு அதிகமாக இருக்கும்.
மைலேஜை பாதிக்கும் சாலைகள்
உயரம், பள்ளங்கள் அதிகமாக உள்ள சாலைகளில் வாகனம் ஓட்டினால் சார்ஜிங் விரைவில் தீர்ந்து போக வாய்ப்பு உள்ளது.எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மைலேஜை உயர்த்துவதற்கு வாகனத்தை சரியாக பராமரிக்க வேண்டும். ஸ்கூட்டர் மெக்கானிக்கல் பார்ட்ஸ் அனைத்தும் நன்றாக இருந்தாலும் சரி பார்க்க வேண்டும். அதிக நேரம் சார்ஜிங் போடுவது நல்லது அல்ல. பேட்டரி சார்ஜிங் டைம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவற்றை செய்தால் எலக்ட்ரிக் வாகனங்களில் மைலேஜை அதிகரிக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Electric bike