முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ஹேண்டா ஆக்டிவா அடுத்த வெர்ஷனில் அதிரடி மாற்றம்..! - ஹோண்டா நிறுவனம் எடுத்த புதிய முடிவு!

ஹேண்டா ஆக்டிவா அடுத்த வெர்ஷனில் அதிரடி மாற்றம்..! - ஹோண்டா நிறுவனம் எடுத்த புதிய முடிவு!

ஆக்டிவா..!

ஆக்டிவா..!

அப்டேட் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆக்டிவா ஸ்கூட்டரின் பெயரில் இருக்கும் ஒரு  அம்சத்தை நீக்க ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த மாற்றம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சில ஆண்டுகளாகவே இந்தியாவின் டாப் செல்லிங் ஸ்கூட்டர் என்றால் அது ஆக்டிவா தான். அப்படி மக்களின் மனம் கவர்ந்த ஸ்கூட்டராக விளங்குகிறது ஆக்டிவா. இப்படி நல்ல விற்பனையாகும் ஆக்டிவா ஸ்கூட்டரை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அப்டேட்களோடு மேம்படுத்தி வருகிறது ஹோண்டா நிறுவனம். இந்நிலையில் ஆக்டிவா ஸ்கூட்டரின் பெயரில் சிறிய மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது ஹோண்டா நிறுவனம்.

ஆக்டிவாவில் செய்யப்படும் அப்டேட்களை மக்கள் பிரித்துப் பார்க்க வசதியாக ஒவ்வொரு தலைமுறை ஸ்கூட்டருக்கு 4ஜி, 5ஜி என ஆக்டிவா என்ற பெயருக்குப் பின்னால் ஒரு துணை பெயரைச் சேர்த்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வந்தது. இந்த துணை பெயரில் ஜி என்பது ஆங்கிலத்தில் ஜெனரேஷன் என்பதைக் குறிக்கும். இந்த பழக்கத்தை ஹேண்டா நிறுவனம் 2015ம் ஆண்டு 3வது தலைமுறை ஸ்கூட்டரிலிருந்து துவங்கியது. இப்போது 6ஜி என்ற 6வது தலைமுறை ஸ்கூட்டர் வரை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தலைமுறைகளில் காலத்திற்கு ஏற்ப புதிய வசதிகள், அம்சங்கள், டிசைனில் மாற்றம் என அப்டேட்டகளை கொண்டு அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இனி இந்த ஜி டேக்கை தன் ஸ்கூட்டரில் பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளது. தற்போதுவரை ஆக்டிவா ஸ்கூட்டர்களில் ஏகப்பட்ட அப்டேட் வருகிறது. தலைமுறை மாற்றம் என்றால் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஹோண்டா நிறுவனம் இனி ஒவ்வொரு ஆண்டும் மார்க்கெட்டின் டிமாண்டிற்கு ஏற்ப ஆக்டிவா ஸ்கூட்டரில் மாற்றங்களைச் செய்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஜி டேக் இருந்தால் அது குழப்பத்தை ஏற்படுத்தும்.

Read More : காரில் இருக்கும் இந்த பட்டன் ஏன் தெரியுமா? 99% பேருக்கு தெரியாத விவரம் இது!

எனவே, ஹோண்டா நிறுவனம் அடுத்த அப்டேட்டிலிருந்து ஜி டேக்கை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி ஜி டேக்கிற்கு பதிலாக ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்ட ஆண்டையே அடையாளமாக வழங்க முடிவு செய்துள்ளது. மற்ற நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளுக்கு ஆண்டையே அடையாளம் காணும் அம்சமாக வைத்துள்ளனர். அதே போல இனி ஹோண்டா நிறுவனமும் வருடத்தையே டேக்காக பயன்படுத்தவுள்ளது.

top videos

    தற்போது ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரை 2 வெர்ஷனாக வெளியிட்டு வருகிறது. ஒன்று 110 சிசி இன்ஜின் கொண்ட வெர்ஷன், மற்றொன்று 125 சிசி இன்ஜின் கொண்ட வெர்ஷன் விரைவில் ஆக்டிவாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெர்ஷன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை பொருத்தவரை தற்போது மார்கெட்டில் அடிப்படை விலையாக 76,826 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இது எக்ஸ் ஷோ ரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Honda, Honda Activa