முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / வேற லெவல் மைலேஜ்.. மீண்டும் வருகிறது ஹீரோவின் பேஷன் ப்ளஸ் பைக்!

வேற லெவல் மைலேஜ்.. மீண்டும் வருகிறது ஹீரோவின் பேஷன் ப்ளஸ் பைக்!

ஹீரோ பைக்

ஹீரோ பைக்

தனக்கு ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க மீண்டும் பேஸன் பிளஸ் பைக்கை விரைவில் களமிறக்க ஹீரோ மோட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய சந்தையில் ஹீரோ மோட்டாருக்கு என தனி இடம் உள்ளது. அதிலும் ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் இப்போது வரை இந்தியாவின் டாப் விற்பனையில் ஒன்றாகவுள்ளது.

ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் இப்போது ஷைன் 100 சிசி பைக்கை அறிமுகம் செய்துள்ளது. விலை மற்றும் மைலேஜ் இரண்டிலுமே ஸ்பிளெண்டர் பைக்கிற்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது ஷைன் 100 சிசி பைக். எனவே இந்தப் போட்டியை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  அதனால் டிமாண்ட் குறைந்ததால் கடந்த 2019 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட பேஸன் பிளஸ் பைக்கை மீண்டும் களமிறக்க முடிவு செய்துள்ளது ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம்.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் மற்றும் டிமாண்ட் குறைவாக இருந்தது ஆகிய காரணங்களால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது அந்த பைக்கை ஹீரோ நிறுவனம் ரீ-லான்ச் செய்யவுள்ளது. பேஷன் லைன்-அப்பில் இது 100 சிசி இன்ஜின் மாடல். ஹோண்டா ஷைன் 100 பைக் விற்பனைக்கு வந்துள்ளதால், 100 சிசி இன்ஜினுடன் கூடிய பேஷன் ப்ளஸ் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை ஹீரோ நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

கூடிய விரைவில் விலைகள் அறிவிக்கப்பட்டு, 2023 ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய மாடலில் இருந்த அதே 97.2 சிசி இன்ஜின்தான், புதிய மாடலிலும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த இன்ஜின், இந்தியாவில் சமீபத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஓபிடி-2  மற்றும் பிஎஸ்6-Phase 2  விதிமுறைகளுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 7.91 பிஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 8.05 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

Also Read : ப்ளிப்கார்ட் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை.. பிரபல நிறுவனத்தின் புது ட்ரிக்..!

இந்த இன்ஜினுடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது. இந்த புதிய பைக்கில், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், i3S ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் மற்றும் செல்போன் சார்ஜிங் போர்ட் என ஏராளமான வசதிகள் இருக்காலம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா ஷைன் 100 பைக்கிற்கு மட்டுமல்லாது, பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கிற்கும், ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Bike, Hero