எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்கப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் 100 இந்திய நகரங்களில் VIDA பிராண்டின் கீழ் அதன் மின்சார ஸ்கூட்டர் விற்பனை மையங்களை ஹீரோ நிறுவனம் திறக்க உள்ளது.
இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையையும் அதிகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி தனது முக்கியமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டான விடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மையங்களை அதிகரிக்க ஹீரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் விடா வி1 பிளஸ் மற்றும் விடா வி1 ப்ரோ ஸ்கூட்டர்களின் விலையில் சுமார் 20 ஆயிரம் வரை குறைத்து அறிவிப்பு செய்துள்ளது. விலைக் குறைப்புக்குப் பிறகு, VIDA V1 Plus மற்றும் VIDA V1 Pro ஆகியவை முறையே ரூ. 1,19,900 மற்றும் ரூ. 1,39,900 ஆக இருக்கும் (இது எக்ஸ்-ஷோரூம் விலை, போர்ட்டபிள் சார்ஜர் மற்றும் FAME II மானியம் உட்பட). இருப்பினும், இரண்டு ஸ்கூட்டர்களின் புதிய விலைகள், அந்தந்த மாநில மானியங்களின் அடிப்படையில் நாடு முழுவதும் வேறுபடும்.
காற்று மாசில்லா வாகன போக்குவரத்திற்காகவும், மின்சார வாகன (EV) வகையின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நாடு முழுவதும் இந்த மாடல் ஸ்கூட்டரை விரைவாக விரிவுபடுத்துவதற்குத் தயாராக உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் வணிகப் பிரிவு தலைவர் ஸ்வதேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். மேலும், புனே, அகமதாபாத், நாக்பூர், நாசிக், ஹைதராபாத், சென்னை, கோழிக்கோடு மற்றும் கொச்சி ஆகிய எட்டு புதிய நகரங்களில் தனது விரிவாக்கத்தை மேற்கொள்ளவும் ஹீரோ மோட்டார்கார்ப் திட்டமிட்டுள்ளது.
Also Read : செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்லலாம்... ரயில்வே அசத்தல் முடிவு...
VIDA பிராண்ட் தற்போது பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் டெல்லியில் 50 இடங்களில் கிட்டத்தட்ட 300 சார்ஜிங் பாயின்ட்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. "எங்களின் புதிய விலைச் சலுகைகள் அதிக வாடிக்கையாளர்களை மின்சார ஸ்கூட்டர்களை வாங்கத் தூண்டும் என ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric bike, Hero