மத்திய வர்த்தகம் & தொழில்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சரான பியூஷ் கோயல் மின்சார வாகனங்கள் தான் எதிர்காலம் என கூறியிருக்கிறார். எனவே நாட்டில் உள்ள வாகன உதிரிபாக தயாரிப்பாளர்கள் எலெக்ட்ரிக் வாகன துறையில் கவனம் செலுத்தி, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தரமான உதிரிபாகங்களை தயாரிக்கத் தொடங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.பிரகதி மைதானத்தில் நடந்த கடைசி ஆட்டோ காம்பொனென்ட் எக்ஸ்போவின் போது பேசிய சில உதிரிபாக தயாரிப்பாளர்கள், EV நிறுவனங்கள் தங்களுக்கான உதிரிபாக தேவைகளை நிறைவேற்ற உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நேரம் கொடுப்பதற்கு பதில், ஐரோப்பா அல்லது சீனாவில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய விரும்புகின்றனர் என கூறினர்.
தரமான தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பம் ஏற்கனவே கிடைக்கும் மற்ற நாடுகளில் இருந்து தங்களுக்கு தேவைப்படும் உதிர்பகங்களை வாங்குவது எளிது என EV நிறுவனங்கள் வாதிடுகின்றன. பிற நாடுகளிடமிருந்து EV உதிரிபாகங்களை நிறுவனங்கள் வாங்குவது பற்றி கருத்து தெரிவித்திருக்கும் அமைச்சர் பியூஷ் கோயல், இது ஒரு தடையற்ற சந்தை என்பதால் இந்த செயல்முறையை கட்டுப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை,. ஆனால் இந்திய உதிரிபாகத் தொழில் நிறுவனங்கள் போட்டி விலையில் நல்ல தரமான EV உதிரிபாகங்களை தயாரிக்க தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.தான் வலியுறுத்துவது போல இந்திய வாகன உதிரிபாக தயாரிப்பாளர்கள் EV துறையில் கவனம் செலுத்தினால், எந்த EV உற்பத்தியாளரும் வெளிநாடுகளில் இருந்து எந்த ஒரு உதிரிபாகத்தையும் இறக்குமதி செய்ய விரும்ப மாட்டார்கள் என்று தெளிவாக கூறினார்.
மேலும் பேசிய அமைச்சர் இது மிகவும் போட்டி நிறைந்த உலகம் ஆனால் எந்த இறக்குமதியையும் அரசாங்கம் நிறுத்தாது. இந்த சூழலில் இந்திய தொழில்துறையை மிகவும் போட்டித்தன்மையுடையதாக மாற்றுவதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதற்கான சிறந்த வழி ஹை-குவாலிட்டி தயாரிப்புகளை உற்பத்தி செய்வதாகும்.அதே போல வேஸ்ட்டேஜ் குறையும் போது செயல்பாடு மற்றும் சந்தையின் அளவும் அதிகரிக்கும். இதுவே போட்டித்தன்மையடைய சிறந்த வழி என்றும் கோயல் விளக்கினார்.
இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் (ACMA) நான் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறேன். சர்வதேச அளவில் தேவைப்படும் சிறந்த தரத்தை உருவாக்கும் திறன் தங்களுக்கு உள்ளது என்பதில் அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். விலை மற்றும் தரம் இரண்டிலும் சர்வதேச அளவில் போட்டியிட முடியும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் கூறியதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்திய ஆட்டோ உதிரிபாக துறையின் இந்த தன்னம்பிக்கையை நான் பாராட்டுகிறேன் என கோயல் கூறினார்.குவாலிட்டி
கன்ட்ரோல் ஆர்டர்ஸ்: தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் குறித்து பேசிய அமைச்சர், அரசின் கவனம் எப்போதுமே இந்தியாவின் தரத்தை மேம்படுத்துவதிலும், தொழில்துறை மற்றும் இந்திய நுகர்வோரின் மனநிலையை மாற்றுவதையும் நோக்கமாக கொண்டது என்பதை எடுத்துரைத்தார். மேலும் பேசிய அமைச்சர் உள்ளூரில் ஒரு வலுவான தரமான சுற்றுச்சூழல் அமைப்பை அடைவதும், நுகர்வோருக்கு உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யும் தரமான தயாரிப்புகளை வழங்குவதும் மத்திய அரசின் முக்கிய இலக்குகளாக இருந்தாலும், Atmanirbhar Bharat இலக்கை அடைவதில் QCO முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். தேசிய அளவில் இந்திய தரநிலைகளை ஏற்றுக்கொள்ள அரசு அதிக முன்னுரிமை அளித்துள்ளது.
மற்றும் 493 தயாரிப்புகளை உள்ளடக்கிய மொத்தம் 115 QCO-க்கள் இந்திய தரநிலைகளின் (BIS) சான்றிதழுக்காக அரசால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. 106 தயாரிப்புகளை உள்ளடக்கிய 14 QCO-க்கள் மட்டுமே மே 2014 வரை கட்டாய BIS சான்றிதழ் மற்றும் இந்திய தரநிலைகளை செயல்படுத்த அறிவிக்கப்பட்டதாகவும், மே 2014-க்கு பின், 387 தயாரிப்புகளை உள்ளடக்கிய மொத்தம் 101 QCO-க்கள் அறிவிக்கப்பட்டதாகவும் கோயல் கூறினார்.தற்போது BIS ஆனது EV-க்கள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்புக்கான இந்திய தரநிலைகளை வகுத்துள்ளது.
இதில் பின்வருவன அடங்கும் : IS 17855:2022 - எலெக்ட்ரிக்கலி ப்ரொப்பல்ட் ரோட் வெஹிகிள்ஸ் - லித்தியம்-அயன் ட்ராக்ஷன் பேட்டரி பேக்ஸ் & சிஸ்டம்ஸ்IS 18073:2023 - எலெக்ட்ரிக் ட்ராக்ஷன் மோட்டார்IS 17191 சீரிஸ் - ஸ்டாண்டர்ட்ஸ் ஃபார் மெஷர்மென்ட் ஆஃப் ரேஞ்ச், எனர்ஜி, கன்சப்ஷன் & நெட் பவர் இன் E-வெஹிகிள் IS 17017 சீரிஸ் - ஸ்டாண்டர்ட்ஸ் ஆன் E-வெஹிகிள் சார்ஜிங் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் - கன்டக்டிங் சார்ஜிங் சிஸ்டம்ஸ்IS 17896 சீரிஸ் - ஸ்டாண்டர்ட்ஸ் ஆன் ஜெனரல் கைடன்ஸ் & சேஃப்ட்டி ரெக்கொயர்மென்ட்ஸ் ஆஃப் பேட்டரி ஸ்வேப்பிங் சிஸ்டம் தொழில்துறை மற்றும் அந்தந்த அமைச்சகங்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, இந்த நடவடிக்கைகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile