முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / காரில் இருக்கும் இந்த பட்டன்.. 1, 2, 3 என இருப்பது ஏன் தெரியுமா? கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!

காரில் இருக்கும் இந்த பட்டன்.. 1, 2, 3 என இருப்பது ஏன் தெரியுமா? கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!

கார் பட்டன்

கார் பட்டன்

உங்கள் காரின் ஓட்டுநரின் பக்க மூலையில் 1,2,3 என்று எழுதப்பட்ட சிறிய ரொட்டேட்டரில் நீங்கள் தினமும் பார்க்கும் அந்த அம்சத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

  • Last Updated :
  • Tamil Nadu, India

அன்றாடம் பார்க்கும் காரில் சில அம்சங்கள் இருந்தாலும் அவற்றின் சரியான பயன்பாடு எல்லாருக்குமே தெரியவதில்லை. இருப்பினும், இந்த அம்சங்கள் பல சோதனைகள் மற்றும் வாகனங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுபவை. உங்கள் காரின் ஓட்டுநரின் பக்க மூலையில் 1,2,3 என்று எழுதப்பட்ட சிறிய ரொட்டேட்டரில் நீங்கள் தினமும் பார்க்கும் அந்த அம்சத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? காரின் முன்புறம் இருக்கும் பட்டனை பலரும் சுழற்றி இருப்பார்கள். ஆனால் அது ஏன் கொடுக்கப்பட்டுள்ளது என பலருக்கும் தெரியாது.

இந்த அம்சம் ஹெட்லைட் லெவலிங் அட்ஜஸ்டர் ஆகும். இந்த அம்சத்தின் உதவியுடன், உங்கள் ஹெட்லைட்டின் ஒளியை மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி நகர்த்தலாம். ஹெட்லைட் உயர் பீம் மற்றும் லோ பீம் என்ற ஆப்ஷனைக் கொண்டிருந்தாலும், இந்த வசதியின் பயன்பாடு தனித்தன்மை வாய்ந்தது.

ஹெட்லைட் லெவலர் பெரும்பாலான கார்களில் கையால் மாற்றுவது போலத்தான் இருக்கும். ஆனால் இப்போது ஆட்டோமேட்டிக்காகவே வரத்தொடங்கிவிட்டது. ஆனால் பழைய கார்களில் இந்த முறை பட்டனே உள்ளது.அந்த பட்டனில் எழுதப்பட்ட 1,2,3 என்பது ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலைக்கான பயன்பாடு. நீங்கள் காரில் தனியாக இருக்கும்போது, ​​ஹெட்லைட் ஒளி லெவலை 0 நிலையிலும், 1 நிலையிலும் வைத்திருக்கலாம். அதாவது காரில் ஒருவர் மட்டுமே பயணிக்கும்போது கார் சரியான மட்டத்தில் பயணிக்கும்.

அந்த நிலையில் உங்கள் ஹெட்லைட் சரியான லெவலில் இருக்கும். அதுவே காரில் 2 அல்லது 3 பயணிகள் பின்னால் இருந்தால் எடை காரணமாக கார் சற்று பின்னால் அழுந்தும் அந்தே நேரத்தில் ஹெட்லைட் வெளிச்சம் சற்று மேல்நோக்கி செல்லும் அதனால் அந்த பட்டனில் 2வது நிலையை வைக்க வேண்டும்.

அதுவே காரில் 5 பேருக்கு மேல் பயணித்தால் காரின் பின்புறம் எடை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் 3 வது நிலையை வைக்க வேண்டும்.

First published:

Tags: Car