முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / பைக் ஹெட் லைட் தொடர்ந்து எரிவதால் பேட்டரி குறையுமா? மைலேஜ் பாதிக்குமா? உண்மை இதுதான்!

பைக் ஹெட் லைட் தொடர்ந்து எரிவதால் பேட்டரி குறையுமா? மைலேஜ் பாதிக்குமா? உண்மை இதுதான்!

பைக்

பைக்

பைக்கில் ஹெட்லைட்கள் எப்போதும் எரிவதால் பைக்கின் பேட்டரி குறைவதாகவும், மைலேஜ் கபாதிக்கப்படுவதாகவும் பலர் நம்புகிறார்கள். உண்மை என்ன?

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹெட்லைட்கள் எப்பொழுதும் ஆன் செய்யப்படுவது ஏன்:

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டர்களின் ஹெட்லைட் என்பது இரவுமட்டுமே எரியும். ஆனால் 2017க்கு பிறகு வரும் பைக்குகளில் பகலிலும் ஹெட்லைட் எரியும். ஏப்ரல் 1, 2017 முதல், நாட்டில் விற்கப்படும் ஒவ்வொரு புதிய பைக்கும் AHO அமைப்புடன் வருகிறது, அதாவது ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன் அம்சம். இப்போது பைக் மற்றும் ஸ்கூட்டரின் ஹெட்லைட் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும். இருப்பினும், புதிய பைக்கை வாங்கிய பிறகு, சிலர் பைக்கை மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்று மாற்றியமைத்து ஹெட்லைட் ஸ்விட்ச் வைத்து விடுகின்றனர். ஆனால் தனி ஸ்விட்ச் வைத்து பகலில் ஹெட்லைட்டை ஆஃப் செய்வது சட்டத்திற்கு எதிரானது. ஹெட்லைட்களை எப்பொழுதும் எரிய வைப்பதால் பேட்டரி தீர்ந்துவிடும் என நினைப்பதால் மக்கள் இதைச் செய்கிறார்கள்.அதே நேரத்தில், ஹெட்லைட்கள் எப்போதும் எரிவதால் பைக்கின் மைலேஜ் குறைகிறது என்றும் பலர் நம்புகிறார்கள்.

ஹெட்லைட்களை எப்போதும் எரிய வைப்பதால் என்ன நன்மைகள்?

சாலை விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன் (AHO) அம்சத்தை அறிமுகப்படுத்த மத்திய போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது. எப்பொழுதும் ஹெட்லைட் எரிவதன் முக்கிய நோக்கம் சாலைகளில் இரு சக்கர வாகனத்தின் பார்வையை அதிகரிப்பதாகும். உண்மையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில், வாகனங்களின் பார்வையை அதிகரிக்க இந்த விதி பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக, பார்வைத்திறன் குறைவாக உள்ளதால் சாலை விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளது.

இந்தியாவிலும் இரு சக்கர வாகனங்களில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன் அம்சத்தை அறிமுகப்படுத்தியதற்கு இதுவே முக்கிய காரணம். உண்மையில், பைக்குகள் சாலையில் செல்வது பெரிய வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு பெரிய கவனத்தில் வருவதில்லை. அதே போல மோசமான வானிலை அல்லது பனிமூட்டம் காரணமாக இரு சக்கர வாகனங்கள் தெரிவதில்லை. அந்த நேரத்தில் பைக்கின் ஹெட்லைட் எரிந்திருந்தால், தூரத்திலிருந்தும் பைக்கை பார்க்க முடியும்.

பேட்டரி சேதம் என்ன நடக்கும்?

ஹெட்லைட் எப்போதும் எரிவதால் AHO கொண்ட பைக் அதிக பேட்டரியை பயன்படுத்துகிறது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் AHO உடன் பைக்கில் ஹெட்லைட்களை எப்போதும் எரிய வைப்பது பேட்டரியை பாதிக்காது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இன்றைய புதிய பைக்குகளில் அட்வான்ஸ் பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் மாற்று வழிகள் பயன்படுத்தப்படுகின்றன, இதன் காரணமாக சுமை அதிகரித்தாலும் பேட்டரி பாதிக்கப்படாது.

அதேபோல AHO அமைப்பு, மறுபுறம், பைக்கின் மைலேஜை பாதிக்காது. இப்போது பல பைக்குகள் LED DRL உடன் வரத் தொடங்கியுள்ளன, அதனால் பேட்டரி கண்டிப்பாக பாதிக்கப்படாது

First published:

Tags: Bike