முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / சரிவைக் கண்ட பட்ஜெட் விலை வாகனங்கள்... இது தான் காரணம்...

சரிவைக் கண்ட பட்ஜெட் விலை வாகனங்கள்... இது தான் காரணம்...

பட்ஜெட் விலை வாகனங்கள்

பட்ஜெட் விலை வாகனங்கள்

பட்ஜெட் விலை வாகனங்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய வாகனச் சந்தை என்பது பலதரப்பட்ட வாகனங்கள் நிறைந்த ஒன்று. அதிக விலை கொண்ட பிரிமியம் ரக சொகுசு வாகனங்களும் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எண்ட்ரி லெவல் எனச் சொல்லப்படும் பட்ஜெட் ரக வாகனங்கள் தான் இந்தியச் சந்தையில் அதிகம் விற்பனைக்கு வந்தன.

சொகுசு கார் மற்றும் பிரிமியம் ரக பைக்குகளின் விற்பனையோடு ஒப்பிட்டால் பட்ஜெட் கார்களின் விற்பனை பல மடங்கு அதிகம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிரிமியம் ரக வாகனங்கள் அதிகம் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற கார் விற்பனையில் 50 விழுக்காடு எஸ்யுவி கார்கள் தான் என்கிறது ஒரு புள்ளி விபரம். அதே நேரம் பட்ஜெட் ரக வாகனங்கள் பெரிய அளவில் உயரவில்லை. அதிலும் இப்போது கம்மி விலை எண்ட்ரி லெவல் வாகனங்களின் விற்பனைச் சரிந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான சியாம் வெளியிட்டுள்ள தகவலின் படி, பட்ஜெட் விலை கார்களின் விற்பனை கடந்த ஆண்டை விட 57 விழுக்காடும், எண்டரி லெவல் பைக்குகளின் விற்பனை கடந்த ஆண்டை விட விழுக்காடும், ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த ஆண்டுகளை விட 27 விழுக்காடும் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மொபெட்டுகளின் விற்பனையிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக 50 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரிய பிரிமியம் ரக பைக்குகள் மற்றும் சொகுசு கார்களின் விற்பனை நல்ல முறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிய ரக கார்கள் விற்பனையில் கொடி கட்டிப் பறந்த மாருதி மற்றும் ரினால்ட் குவிட் நிறுவனங்களே பெரிய அளவில் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளதாக சியாம் அமைப்பு கூறியுள்ளது.

Also Read : Xiaomi 13 Ultra இந்தியாவில் வெளியீடு..! தேதியை அறிவித்த நிறுவனம்..

இந்த இரண்டு நிறுவனங்களும் கடந்த 2016-17 ஆம் நிதியாண்டில் 5.8 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளன. ஆனால் 2023ஆம் நிதியாண்டில் இந்த கார்களின் விற்பனை ரூ. 2 லட்சமாகக் குறைந்துள்ளது. புதுமுக கார் வாடிக்கையாளர்களை கார் வாங்கத் தூண்டுவதே பட்ஜெட் விலை தான் ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் இந்த குறைந்த விலை கார்களின் விலை 25 விழுக்காடு உயர்ந்திருப்பதாகவும், அதனால் தான் சிறிய ரக கார்களின் விற்பனை சரிவை சந்தித்து வருவதாகவும் கூறுகிறார் மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை பிரிவு இயக்குநர் ஷசாங்க் ஸ்ரீவத்சவா.

இதனால் கொள்கை அடிப்படையிலான மாற்றம் கொண்டுவரப்பட்டால் மட்டுமே சிறிய கார்களின் விற்பனை சரிவைத் தடுக்க முடியும் என்கிறார்கள் ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள். நடுத்தர மக்கள் சமாளிக்க முடியாத அளவிற்கு எரிபொருட்களின் விலை ஏற்றமும் கார் வாங்கும் எண்ணத்திற்குத் தடை போடுவதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

First published:

Tags: Automobile, Bike, Cars