முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / கார் டயர் ரொம்ப வருஷம் உழைக்கணுமா? அப்படினா இதை பண்ணுங்க!

கார் டயர் ரொம்ப வருஷம் உழைக்கணுமா? அப்படினா இதை பண்ணுங்க!

கார்

கார்

காரின் ஓட்டத்தை சீராக்குவதே வீல் பேலன்சிங் மற்றும் அலைன்மெண்ட்டும் தான். இதை நம்மில் பல பேர் கண்டு கொள்வதேயில்லை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலான நமக்கு காரை சர்வீஸ் செய்வது என்றால் ஆயில் மாற்றுவது, காரை பளபளப்பாக கழுவி துடைப்பது, காற்று அடிப்பது மற்றும் எலக்ட்ரிக் வேலைகளை பார்ப்பது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் முக்கியமான சில மெயிண்டனனஸ்களை நாம் கண்டு கொள்வதில்லை. அதில் ஒன்று தான் வீல் மெயிண்டனன்ஸ்.

முதலில் எந்த அளவு இடைவெளியில் நாம் நமது காருக்கான வீல் மெயிண்டனன்ஸ் செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி தெரிந்து வைத்துக்கொண்டு அதை செய்யாவிட்டால் டயர்கள், சஸ்பென்ஷன் மற்றும் வாகனத்தின் இயந்திரத்தில் கூட மோசமான விளைவை ஏற்படுத்திவிடும்.

உண்மையில், காரின் கையேடு அல்லது சர்வீஸ் பேக்கில் இந்த வீல் மெயிண்டனன்ஸ் தொடர்பான விபரங்கள் இருப்பதில்லை. அலைன்மெண்ட் மற்றும் வீல் பேலன்சிங் ஆகியவை காரின் சாதாரண சேவையிலிருந்து தனித்தே இருக்கும்.அதனால், காரின் வீல் சீரமைப்பை எப்போது செய்ய வேண்டும் மற்றும் அப்படி செய்யாவிட்டால் காரின் இயக்கத்தின் போது வெளிப்படும் அறிகுறிகள் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

கார் வீல் சீரமைப்பை எப்போது செய்ய வேண்டும்

பொதுவாக, ஒவ்வொரு 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் காரின் வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங் செய்ய வேண்டும். புதிய கார் என்றால் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு இது அவசியப்படாது. அதை விட சிறப்பான யோசனை என்னவென்றால் காரின் வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்சிங் ஆகியவற்றை ஒவ்வொரு சர்வீஸுடன் சேர்த்து செய்து கொள்வது அவசியம். ஆனால் நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்து, நீங்கள் வழக்கமாக காரை ஓட்டும் சாலைகள் செப்பனிடப்படாமல் அல்லது  குண்டும் குழியுமாக இருந்தால், 3 முதல் 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை வீல் அலைன்மென்ட் செய்வது நல்லது.

top videos

    சரியான நேரத்தில் அல்லது முறையான இடைவெளியில் இந்த வேலையை செய்யாவிட்டால்  பல பாதிப்புகள் எற்பட்டு விடும். முக்கியமாக காரின் டயர்கள் மிக மோசமாக பாதிக்கப்படும். சீக்கிரம் டயர்கள் தேய்ந்து அல்லது கிழிந்து விடும். காரின் சஸ்பென்ஷனும் பாதிக்கப்பட்டு, படிப்படியாக ஷாக்அப்சர், டைரோட் எண்ட் ஆகியவற்றுடன் ஆக்சிலும் சேதமடைந்து விடும். இந்தக் குறைபாடுகள் ஏற்பட்டு விட்டால் காரின் எடை எதாவது ஒரு புறத்தில் விழுந்து விடும். மேலும், காரின் எடையில் கனிசமான அளவு எஞ்சின் மேலும் விழும். அதனால் எஞ்சினும் பாதிக்கப்படுவதோடு, காரின் சுமூகமான இயக்கமே தடைபட்டு விடும். காரில் பயணம் செய்வது மிகவும் அலுப்பையும் கொடுக்கும். குறைபாடுகள் நம்  காரில் ஏற்பட்டு விட்டால் அதை சீரமைக்க பல ஆயிரங்கள் செலவு செய்ய நேரிடும். இந்த வீண் செலவை தவிாக்க வேண்டும் என்றால் வீல் மெயிண்டனன்ஸில் எப்போதும் கவனமாக இருங்கள்.

    First published:

    Tags: Car