முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தை திருப்பித் தரும் டிவிஎஸ் நிறுவனம்.. ஏன் தெரியுமா?

வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தை திருப்பித் தரும் டிவிஎஸ் நிறுவனம்.. ஏன் தெரியுமா?

டிவிஎஸ்

டிவிஎஸ்

TVS iQube : ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1,420 ஐக்யூப் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6.627 ஐக்யூப் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் டிவிஎஸ். பெட்ரோல் வாகனங்களை பல மாடல்களில் தயார் செய்து விற்பனை செய்து வரும் டிவிஎஸ், அதே போல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையிலும் தற்போது வெற்றிகரமாக களமிறங்கியுள்ளது . இப்போது ஐக்யூப் என்ற பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. அந்த ஐக்யூப் ஸ்கூட்டரை கடந்த ஆண்டு வரை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கே குறிப்பிட்ட அளவு கட்டணத்தை திருப்பித்தர உள்ளது டிவிஎஸ் நிறுவனம். இதற்காக அந் நிறுவனம் கோடிக் கணக்கான ரூபாயை ஒதுக்கி இருக்கின்றது. இந்த தகவலை டிவிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராதாகிருஷ்ணனும் உறதி செய்திருக்கிறார்.

FAME திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகபட்சமாக எவ்வளவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், எந்தெந்த உதிரி பாகங்களுக்கெல்லாம் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்பது நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விதியை டிவிஎஸ் உள்ளிட்ட சில இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மீறியிருப்பதாக கூறப்படுகிறது. மின்சார இருசக்கர வாகனங்களுக்கான ஆஃப்-போர்டு சார்ஜர்களை வழங்கியதற்கு டிவிஎஸ் நிறுவனம் கூடுதல் கட்டணத்தை வசூல் செய்திருக்கின்றது. இந்த தொகையையே நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்க முடிவு செய்திருக்கின்றது.

இத்திட்டத்தின்படி ஆஃப்-போர்டு சார்ஜர்கள் மற்றும் சார்ஜிங் உதிரி பாகங்கள் ஆகியவற்றிற்கு தனியாக விலை நிர்ணயம் செய்யக் கூடாது என்பது விதியாகும். அதை டிவிஎஸ் நிறுவனம் மீறியிருப்பது விசாரணையில் உறுதியாகிருக்கிறது. அதனால் இந்த உதிரிபாகங்களுக்கான தொகை தோராயமாக 1,700 ரூபாய் வரை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இதற்காக 20கோடி வரை டிவிஎஸ் நிறுவனம் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

டிவிஎஸ் மட்டுமின்றி ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களும் இந்த விதிமீறலில் ஈடுபட்டு இருக்கின்றன.

இந்த நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதலாக வசூல் செய்த கட்டணத்தை திரும்ப வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றன. விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை இந்த நிறுவனங்கள் திரும்பி வழங்கிவிடும் என தெரிகின்றது.

ரூ.138 முதலீட்டில் ரூ.23 லட்சம் வருமானம்... எல்.ஐ.சி -யின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

top videos

    ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1,420 ஐக்யூப் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன. ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6.627 ஐக்யூப் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இப்படி விற்பனை அதிகரித்து வரும் நிலையில் தனது வாடிக்கையாளர்களை இழந்து விடக்கூடாது என்பதற்காகவும், வடிக்கையாளர்களிக் நம்பிக்கையை பெறுவதற்காகவுமே டிவிஎஸ் நிறுவனம் கட்டணம் திருப்பித் தரும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    First published:

    Tags: TVS