சர்வதேச நாடுகளுடன ஒப்பிடுகையில் இந்தியாவின் வாகன சந்தை சீரான முன்னேற்றத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து வந்த நிலை மாறி, இப்போது உலகின் பல நாடுகளுக்கு இந்தியா வாகன ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள சூழல் இந்தியாவின் வாகன உற்பத்தியில் கணிசமான தாக்கத்தையோ அல்லது சுணக்கத்தையோ ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் முக்கியமான இரண்டு காரணிகள் மூலதனப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் இந்தியாவின் புதிய சுற்றுச்சூழல் கொள்கை.
உதிரிப்பாக தட்டுப்பாட்டிற்கு முக்கியமான காரணம் உக்ரைன் தான்.
உலகிலேயே தென்கொரியா, சீனா ஆகிய நாடுகள் தான் செமி கண்டெக்டர் சிப்களை தயாரிக்கின்றன. அதைத் தயாரிக்க நியான் கேஸ் தேவை. இந்த நியான் கேஸ் உக்ரைன் நாட்டில் இருந்து தான் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு அதிகமாக இரும்பு தயாரிக்கப்படும் போது உப பொருளாகக் நியான் கேஸ் கிடைக்கிறது. இது தான் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதை வைத்துத் தான் செமி கண்டெக்டர் சிப்கள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் போர் தொடங்கிய பிறகு இரும்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் நியான் கேஸ் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் செமி கண்டெக்டர் சிப் தயாரிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் மட்டுமல்ல செல்போன் உற்பத்தி உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதே போல் இந்தியாவில் இப்போது சுற்றுச் சூழல் விதிகளின் பிஎஸ்6-ன் இரண்டாம் கட்ட விதிகள் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ளன. அதற்கேற்றார் போல தயாரிக்கப்படும் வாகனங்களில் புதிய, தொழில்நுட்ப மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அதனால் உற்பத்தி செலவு உயர்கிறது. இதனால் வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால்தான் விலை உயர்வு முடிவை கையில் எடுத்துள்ளதாகவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தற்போது டாடா மோட்டார்ஸ் மே 1 முதல் அதன் வாகனங்கள் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், 0.6% வரையில் விலை அதிகரிப்படலாம் என தெரிகிறது. வாகனங்களின் மாடலுக்கு ஏற்ப விலை உயர்வில் மாற்றம் இருக்கலாம். டாடா மோட்டார் மட்டுமே தனது வாகன விலையை உயர்த்தவில்லை.
இந்தியாவின் மிகப்பெரிய கார் விற்பனையாளரான மாருதி, ஹூண்டாய், ஹோண்டா உள்ளிட்ட வாகன நிறுவனங்களும் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளன. அவை அவற்றின் வாகனங்களின் மாடலுக்கு ஏற்ப 2,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையில் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.