முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ரூ.1.20 லட்சம் செலவில் ஒரேநாளில் எலெக்ட்ரிக் காரை தயாரித்து அசத்திய ஆட்டோ ஓட்டுனர்..

ரூ.1.20 லட்சம் செலவில் ஒரேநாளில் எலெக்ட்ரிக் காரை தயாரித்து அசத்திய ஆட்டோ ஓட்டுனர்..

ஆட்டோ ஓட்டுனர் உருவாக்கிய எலக்ட்ரிக் கார்

ஆட்டோ ஓட்டுனர் உருவாக்கிய எலக்ட்ரிக் கார்

Auto Driver creates own Electric Car | பட்டப்படிப்பு படித்திருந்தாலும் சரியான வேலை கிடைக்காமல் வேலையின்றி தவித்ததை அடுத்து வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுவதை தொழிலாக தேர்ந்தெடுத்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில் எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் சுற்றுசூழல் மாசும் அதிகரித்து வருகிறது. இதனால் புதிய வாகனங்களை வாங்கும் மக்களின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. இருப்பினும் எலெக்ட்ரிக் வாகனங்கள் சற்று விலை அதிகம். இந்த சூழலில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் எலெக்ட்ரிக் ஆட்டோ வாங்க விரும்பினார்.

ஆனால், விலை அதிகம் என்பதால் தானே தயாரிக்க முடிவு செய்தார். கடினமாக உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அந்த ஆட்டோ டிரைவர் நிரூபித்து உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் (Jogulamba Gadwal) மாவட்டத்தில் உள்ள உண்டவல்லி மண்டல் பகுதியில் இருக்கும் Bonkuru கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் தான் இந்த ஆட்டோ டிரைவர். இவரது பெயர் பீச்சுபள்ளி (Beechupalli). இவர் கர்னூல் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவராக வசித்து வருகிறார். தன்னால் காசு கொடுத்து வாங்க முடியாத எலெக்ட்ரிக் ஆட்டோவை தயாரிக்க கடுமையாக உழைத்துள்ளார். இதனை தொடர்ந்து தனது அடுத்த கட்ட முயற்சியாக எலெக்ட்ரிக் காரையும் வடிவமைத்துள்ளார்.

மேலும் படிக்க :  Ph.D வாத்தியார் டூ ஜூஸ் கடை தொழில்.. அசத்தி வரும் தஞ்சை ஆசிரியர்..!

பட்டப்படிப்பு படித்திருந்தாலும் சரியான வேலை கிடைக்காமல் வேலையின்றி தவித்ததை அடுத்து வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ ஓட்டுவதை தொழிலாக தேர்ந்தெடுத்தார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இவரது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டு பாராட்டுகளையும் பெற்றுள்ளது. தன்னுடைய சிறுவயது முதலே குடும்ப உறுப்பினர்களுடன் ஜாலியாக காரில் பயணிக்க வேண்டும் என்று கனவோடு இருந்து வந்துள்ளார் சாமானியரான பீச்சுபள்ளி. ஆனால் நிதி நிலைமை குறைவாக இருந்ததால், மாற்று வழிகளில் கவனம் செலுத்தினார்.

இதன் ஒரு பகுதியாக முதலில் டீசல் ஆட்டோ ஒன்றை எலெக்ட்ரிக்கல் ஆட்டோவாக வெற்றிகரமாக மாற்றினார். வெறும் ரூ.80 ஆயிரம் செலவில் பழைய எலெக்ட்ரிக் வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு இந்த ஆட்டோவை தயாரித்தார். இதனை தொடர்ந்து இரட்டிப்பு உற்சாகத்துடன், ஒரு எலெக்ட்ரிக் காரையும் உருவாக்கினார்.

மேலும் படிக்க :  தூள் கிளப்பும் ஊட்டி காபி தூள்.. எப்படி தயாரிப்பாங்க தெரியுமா?

ஒரே நாளில்...  தனது வாகன உற்பத்தி அனுபவத்தில் இருந்து மாருதி 800 காரின் பழைய பாகங்களை சேகரித்து, டெல்லியில் சில எலெக்ட்ரிக் காரின் உதிரி பாகங்களை வாங்கினார். 4 பேட்டரிகள், டிசி மோட்டார், 48 வாட் கன்ட்ரோலர் மற்றும் பிற டிவைஸ்களை பயன்படுத்தி இந்த எலெக்ட்ரிக் காரை வெறும் ரூ.1.20 லட்சம் செலவில் உருவாக்கினார். இதில் உச்சகட்ட ஆச்சரியம் என்னவென்றால் ஒரே நாளில் இந்த எலெக்ட்ரிக் காரை தயார் செய்திருப்பது தான்.

மேலும் படிக்க :  1,300 பொம்மைகளுடன் வீட்டிற்குள் அமைக்கப்பட்ட மியூசியம்… வைரலாகும் புகைப்படங்கள்!

தனது முயற்சியில் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் பற்றி ஆச்சர்ய தகவல்களை கூறி இருக்கும் ஆட்டோ டிரைவரான பீச்சுபள்ளி, சாதாரண கார் உற்பத்தியை விட இதன் உற்பத்தி செலவு மிகவும் குறைவு. 1000 வாட் டிசி மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் இது 5 குவிண்டால் எடையை இழுக்கும். ஹெவி கேஜ் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் காரில் 10 பேர் பயணம் செய்யலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 முதல் 80 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்கிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும். மணிக்கு 40 கிமீ வேகத்தில் சென்றால் நல்ல மைலேஜ் கிடைக்கும். இந்த எலெக்ட்ரிக் காரை விவசாயிகள் வயல்களுக்கு தொழிலாளர்களை கொண்டு செல்ல அல்லது தானியங்களை வீட்டிற்கு கொண்டு செல்ல பயன்படுத்தலாம். மளிகை விநியோகம், மொபைல் டிபன் சென்டர், பானிபூரி மற்றும் பிற கடைகளுக்கும் இது பயனளிக்கும் என்றும் பீச்சுபள்ளி கூறுகிறார். வெறும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கார் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல டீலர்கள் இதை வாங்க விரும்பினாலும், காரை மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதால் பீச்சுபள்ளி இதனை விற்க மறுத்துவிட்டார்.

First published:

Tags: Automobile, Electric car, Telangana