முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / எலெக்ட்ரிக் வாகனம் வாங்குற ஐடியா இருக்கா… கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!

எலெக்ட்ரிக் வாகனம் வாங்குற ஐடியா இருக்கா… கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் பயன்பாட்டை இந்திய அரசு தற்போது ஊக்குவித்து வருகிறது. ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யக்கூடிய வசதிகள் குறைவாகவே இருக்கக்கூடிய இந்த சமயத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது சரிதானா அல்லது இன்னும் சில வருடங்கள் கழித்து வாங்கலாமா?

மேலும் படிக்கவும் ...
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எரிபொருள் தேவையை குறைப்பதற்காகவும் காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடவும் எலக்ட்ரிக் கார்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் பயன்பாட்டை இந்திய அரசு தற்போது ஊக்குவித்து வருகிறது. ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யக்கூடிய வசதிகள் குறைவாகவே இருக்கக்கூடிய இந்த சமயத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது சரிதானா அல்லது இன்னும் சில வருடங்கள் கழித்து வாங்கலாமா? இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் EV தொழில்நுட்பம் அதிக அளவில் பிரபலமாகி, பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது வளர்ந்து வரும் எரிபொருள் தேவையை சமாளிப்பதற்கான ஒரு தீர்வாக காணப்படுகிறது. ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா மற்றும் மகேந்திரா போன்ற கார் உற்பத்தியாளர்கள் EV வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம், டொயோட்டா மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்கள் ஹைபிரிட் கார்களை உற்பத்தி செய்வதில் மும்மரமாக உள்ளனர். ஒரு சிலர் எலக்ட்ரிக் வாகனங்களை எதிர்காலமாக கருதும் பொழுது, மற்றுமொரு தரப்பினர் இந்த வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்கான தேவை குறித்து வேறு விதமான கருத்தை தெரிவிக்கின்றனர். ஆகவே எலக்ட்ரிக் வாகனங்களை நமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் தீமைகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில் EV வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள்:

1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் பொழுது எந்தவிதமான புகை வெளியேற்றமும் இல்லாத காரணத்தால் இது ஒரு சுத்தமான போக்குவரத்து ஆப்ஷனாக கருதப்படுகிறது. EV -யை பயன்படுத்துவதன் மூலம் ஒரு நபர் காற்று மாசுபாட்டை குறைக்கவும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராடவும் பங்களிக்கிறார் என்று அர்த்தம்.

2. குறைந்த செலவு

வழக்கமாக பயன்பாட்டில் உள்ள இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் வாகனங்களுடன் ஒப்பிடும் பொழுது எலக்ட்ரிக் வாகனங்கள் குறைந்த செலவையே கொண்டுள்ளன. ஒரு காருக்கு பெட்ரோல் அல்லது டீசல் பயன்படுத்துவதை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு குறைவான செலவே ஆகிறது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களை மெயின்டைன் செய்வது மிகவும் எளிது.

3. அரசு மானியங்கள்

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு பல்வேறு விதமான இன்சென்டிவ்கள் மற்றும் மானியங்களை வழங்குகிறது. குறைந்த ஜிஎஸ்டி வரிகள், இன்கம் டேக்ஸ் சலுகைகள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கான மானிய தொகை போன்றவை இதில் அடங்கும். வழக்கமாக பயன்பாட்டில் உள்ள கார்களை வாங்க இது போன்ற சலுகைகள் கிடைப்பதில்லை.

4. எரிபொருட்களை சார்ந்து இருப்பதற்கான தேவை குறைகிறது

இந்தியாவைப் பொறுத்தவரை எரிபொருட்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொழுது எரிபொருட்களை சார்ந்து இருப்பதற்கான தேவைகளை நாம் குறைத்துக் கொள்ளலாம். மேலும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஆற்றல் (renewable energy) மூலங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கலாம்.

5. தொழில்நுட்ப முன்னேற்றம்

பேட்டரி தொழில்நுட்பம், சார்ஜ் செய்வதற்கான வசதிகள் மற்றும் பல்வேறு அம்சங்கள் என எலக்ட்ரிக் வாகன சந்தை நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டு செல்கிறது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதன் மூலமாக ஒருவர் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அனுபவத்தை பெறலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதால் ஏற்படும் தீமைகள்

1. அதிக ஆரம்ப செலவு

வழக்கமாக பயன்பாட்டில் உள்ள கார்கள் வாங்குவதை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கான ஆரம்ப கால செலவு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் தான். எனினும், எலக்ட்ரிக் வாகனங்களின் குறைந்த ஆப்பரேட்டிங் மற்றும் மெயின்டனன்ஸ் செலவுகளை கருத்தில் கொள்ளும் பொழுது ஆரம்பத்தில் அதிகமாக செலவு செய்வதில் தவறொன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், எலக்ட்ரிக் வாகனங்கள் நீண்ட காலத்திற்கு உங்கள் பணத்தை மிச்சப்படுத்தி கொடுக்கக்கூடியது.

2. குறைந்த சார்ஜிங் பாயிண்டுகள்

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான அமைப்புகள் படிப்படியாக வளர்ந்து வந்தாலும், பெட்ரோல் பங்குகளை காட்டிலும் இது குறைவாகவே உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருப்பதால், அது போன்ற இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது சற்று கடினமான காரியம் தான்.

3. குறைந்த ரேஞ்ச்

சமீபத்திய வருடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்சுகள் முன்னேற்றம் அடைந்து வந்தாலும், இது வழக்கமான வாகனங்களுடன் ஒப்பிடும்பொழுது குறைவாகவே உள்ளது. ஆகவே அடிக்கடி தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் குறைந்த ரேஞ்சு காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த யோசிப்பது சரியாக தோன்றுகிறது.

4. சார்ஜ் செய்வதற்கான நேரம் அதிகம்

ஒரு காரில் பெட்ரோல் ரீஃபில் செய்யும் நேரத்தை கணக்கிடும் பொழுது, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான நேரம் அதிகமாக இருக்கிறது. என்ன தான் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்கள் கிடைத்தாலும், ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்வதற்கான நேரம் அதிகமாக உள்ளது. பிஸியாக இருக்கும் நபர்களுக்கு இது ஒரு பின்னடைவாக அமைகிறது. எனினும் சார்ஜிங் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்ந்து சார்ஜ் செய்வதற்கான வேகத்தை அதிகரித்து வருகிறது.

5. பேட்டரி செயல்திறன் குறைதல் மற்றும் பேட்டரி ரீபிளேஸ்மெண்ட்

காலப்போக்கில் எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியின் செயல்திறன் குறைகிறது. இதன் காரணமாக வாகனத்தின் ரேஞ்ச் குறைகிறது. ஆகவே இது பேட்டரி மாற்றுவதற்கான தேவையை உருவாக்குகிறது. எனினும் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரியை மாற்றுவதற்கான செலவு அதிகம். இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பெரிய செலவு செய்ய வேண்டுமே என பலர் யோசிக்கின்றனர்.

எலக்ட்ரிக் வாகனங்கள் பல்வேறு நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அதனை பயன்படுத்துவதால் ஒரு சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே ஒரு நபர் அவரின் தேவையை பொறுத்து எலக்ட்ரிக் வாகனம் அவருக்கு சரிவருமா என அலசி ஆராய்ந்த பிறகு எலக்ட்ரிக் வாகனத்தை வாங்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Electric bike, Electric car