முகப்பு /செய்தி /அரியலூர் / அரியலூர் மக்களை விடிய விடிய தூங்க விடாத முதலை.. பகீர் சம்பவம்!

அரியலூர் மக்களை விடிய விடிய தூங்க விடாத முதலை.. பகீர் சம்பவம்!

வயலுக்குள் புகுந்த முதலை

வயலுக்குள் புகுந்த முதலை

வனத்துறையினர் முதலையை பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் கட்டி கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்

  • Last Updated :
  • Ariyalur, India

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குலோத்துங்க நல்லூர் கிராமத்தில் இரவு சாலை ஓரம் உள்ள வயல்வெளி பகுதியில் சுமார் 12 அடி நீளம் உள்ள முதலை இருப்பதைக் கண்ட விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அப்பகுதி மக்கள் அச்சத்தின் காரணமாக முதலையை தேடி வந்தனர். இரவு நேரம் என்பதால் ஆடு, மாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் முதலையை பிடித்து கட்டி வைத்தனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கஉரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடிய 3 பேர் அரியலூரில் கைது

top videos

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி காவல்துறையினர் முதலைக்கு நாய்கள் மூலம் அச்சுறுத்தல் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு செய்திருந்தனர். தொடர்ந்து  வனத்துறையினர் முதலையை பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் கட்டி கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.

    First published:

    Tags: Crocodile